கனடாவின் மிகப் பழமையான திரைப்பட விழாவான 49 வது மாண்ட்ரீல் விழா டு நோவியோ சினிமாவில் (Montreal Festival Du Nouveau Cinema) திரையிட சுயாதீன தமிழ் திரைப்படம் நிலநடுக்கம் (Nilanadukkam) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பாலாஜி வேம்பு செல்லி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இதே படவிழாவில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு படம் திரையிடப்பட்டது. எழுபது நிமிடங்கள் ஓடக்கூடிய நிலநடுக்கம் ஒரு பரிசோதனை சினிமா (Cinema). கொடைக்கானலில் இருந்து 35 - 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கக்கல் என்ற கிராமத்தைச் சுற்றி நடக்கும் ஆபத்தும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.
ALSO READ | கோவா திரைப்பட விழாவில் நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருது!
ஒரு புகைப்பட இதழியலாளரைப் பற்றிப் பேசுகிறது நிலநடுக்கம். அந்த கதாபாத்திரத்தில் மனுசங்கடா படத்தில் நடித்த ராஜிவ் ஆனந்த் நடித்துள்ளார். சில நவீன நாடகக் கலைஞர்களும், உள்ளூர்க்காரர்களும்கூட நடித்துள்ளார்கள்.
மாண்ட்ரியல் பட விழா அக்டோபர் 7 முதல் 18 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது கனடாவின் மிகப் பழைமையான படவிழாவாகக் கருதப்படுகிறது. போட்டிக்கான பிரிவில் நிலநடுக்கம் படம் திரையிடப்படவுள்ளது. அதற்கு ரசிகர்களின் விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ALSO READ | திரைக்கு வருகிறது கல்வான் மோதல், படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அஜய் தேவ்கன்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR