சுடருக்கு ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக வந்து சிக்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் அப்டேட்

Ninaithen Vandai Zee Tamil Serial Today's Episode: சுடருக்கு குழந்தைகள் ஸ்கெட்ச் போட்ட நிலையில், வாண்டடாக வந்து மனோகரி சிக்கிக் கொண்டார். நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்டில் இதுமாதிரியான சுவாரஸ்யங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.      

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 15, 2024, 01:35 PM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்
  • சுடருக்கு ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்
  • வாண்டடாக வந்து சிக்கிய மனோகரி
சுடருக்கு ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக வந்து சிக்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின்  நேற்றைய எபிசோடில் சுடருக்கு கனகவல்லி வேலை கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

அதாவது, கனகவல்லி எழிலுக்கு போன் போட்டு கேர் டேக்கரை வேலைக்கு எடுத்தாச்சு என்று விஷயத்தை சொல்ல பக்கத்தில் இருந்து இதை கேட்ட மனோகரி கடுப்பாகிறாள், புதுசா வந்திருக்கவ யாருனு பார்க்கணும் என்று முடிவெடுக்கிறாள். இதனை தொடர்ந்து இங்கே பசியில் தவிக்கும் சுடர் கனகவல்லியிடம் சென்று சாப்பிட சொல்ல அவள் நான் சாப்பிட டைம் ஆகும், எப்பயும் ஒரே டைம்ல தான் சாப்பிடுவேன் என்று சொல்வதோடு சுடரின் பசியை புரிந்து கொள்ளும் கனகவல்லி உனக்கு பசித்தா சாப்பிடு என்று சொல்ல இல்ல நான் குழந்தைகளோட சேர்ந்து சாப்பிடுறேன் என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா?

ஆனால் கனகவல்லி உன் முகத்துலயே பசி தெரியுது என்று சாப்பிட சொல்ல சுடரும் சாப்பிடுகிறாள். இந்த நேரத்தில் குழந்தைகள் சுடரை டார்ச்சர் செய்ய பிளான் போட்டு சாப்பிட்டு மேல வந்ததும் டிவி போட்டு சேரில் உட்காரும் போது கீழே விழுந்து விட ஏற்பாடு செய்கின்றனர். சுடரும் சேரில் உட்கார போகும் நேரத்தில் மனோகரி உள்ளே வந்து விடுகிறாள். 

சுடர் யார் நீங்க என்று கேட்க மனோகரி கோபப்பட செல்வி மனோகரி பற்றி சொல்கிறாள், பிறகு அவள் சுடரை உட்கார சொல்ல இவள் நீங்க உட்காருங்க என்று சொல்லி கொண்டிருக்க ஒரு கட்டத்தில் மனோகரி உட்காரு என்று அதட்ட சுடரும் உட்கார போக பசங்க இப்போ சுடர் கீழே விழுந்தா மனோகரி அவங்களை வெளியே துரத்திடுவாங்க என்று பிளான் போட்டு சுடரிடம் பாசமாக பேசி உள்ளே அழைத்து சென்று விட மனோகரி அந்த சேரில் உட்கார கீழே விழுகிறாள். இதை பார்த்து சுடர் விழுந்து விழுந்து சிரிக்க மனோகர் உச்சகட்ட டென்ஷன் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | SK 23: சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! ஹீரோயின் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News