விசில் அடிச்சு கை தட்டுனது சண்டை செய்யும் யுவனுக்கு மட்டும்தான் - பா. இரஞ்சித்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திரையுலக வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி அவருக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு யுவனுடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 15, 2022, 04:34 PM IST
  • 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன்
  • பா. இரஞ்சித் யுவனின் ரசிகர்
  • யுவனுடன் பணிபுரிய பா. இரஞ்சித்துக்கு விருப்பம்
 விசில் அடிச்சு கை தட்டுனது சண்டை செய்யும் யுவனுக்கு மட்டும்தான் - பா. இரஞ்சித் title=

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திரையுலக வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி அவருக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு யுவனுடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் கவிஞர் நா. முத்துக்குமாருடைய மகன் ஆதவன் முத்துக்குமார் போகாதே போகாதே பாடலை முத்துக்குமார் - யுவன் நட்பை வைத்து எழுதியிருந்தார். அந்தப் பாடலையும் யுவன் மேடையில் பாடினார்.

Yuvan, Aadhavan

விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், “என்னை இரண்டு, மூன்று பாடல்கள் சோகமாக்கும். அதில் இளையராஜாவின் தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்கு அடுத்ததாக கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற பறவையே எங்கு இருக்கிறாய் பாடல். அந்தப் பாடல் பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்றது.

மேலும் படிக்க | அன்றே கணித்த உதயநிதி- சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் எவ்வளவு?!

எனது தனிமையையும், காதலையும் வெளிக்கொண்டுவந்த பாடல் அது. யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணிபுரிய வேண்டுமென்று எனக்கு ஆசைதான். ஆனால் எனக்கு பயம் இருக்கிறது. எனக்கு இசை பற்றி தெரியாது. எப்படி வேண்டுமென்று கேட்கவும் தெரியாது. அதனால்தான் என்னை புரிந்துகொண்ட, தெரிந்துகொண்ட சந்தோஷ் நாராயணனுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன்.

Yuvan

நான் பெரிதாக படங்களை பார்த்து வளர்ந்தவன் கிடையாது. கல்லூரி காலத்தில்தான் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் திரையரங்கு சென்று விசில் அடித்து கை தட்டியது என்றால் அது யுவன் ஷங்கர் பெயருக்கு மட்டும்தான்.

மேலும் படிக்க | பட்ஜெட்டைவிட கதைதான் முக்கியம்... பெரிய பட்ஜெட் படங்களை சீண்டிய ஆர்.கே. சுரேஷ்?

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வது சாதாரணமானது இல்லை. இங்கு எப்போதும் சண்டை செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்படி தொடர்ந்து சண்டை செய்யும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News