பையா 2: கார்த்தி, ஆர்யா இல்லையாம்.. பிரபல வாரிசு நடிகரின் மகன் தான் ஹீரோ

கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் வெளியான பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்குப் பதிலாக வாரிசு நடிகரின் மகனை ஹீரோவாக களமிறக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 11, 2023, 08:25 AM IST
  • பையா 2 படத்தில் அதர்வாவின் தம்பியும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
  • இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
  • முன்னதாக கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
பையா 2: கார்த்தி, ஆர்யா இல்லையாம்.. பிரபல வாரிசு நடிகரின் மகன் தான் ஹீரோ title=

பையா 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்: கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் வெளியான பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்குப் பதிலாக வாரிசு நடிகரின் மகனை ஹீரோவாக களமிறக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் லிங்குசாமி.

பையா திரைப்படம்:
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி (Actor Karthi) மற்றும் தமன்னா (Actress Tamannaah Bhatia) நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பையா'. தமிழில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது. எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. வழக்கமான கதை தான் என்றாலும் இந்த திரைப்படம் போர் அடிக்காமல் ரசிக்கும்படி அமைந்திருந்தது தான் திரைப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கார்த்தியின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் ஒரு சிறப்பான படமாக அமைந்திருந்தது, அதேபோல இயக்குனர் லிங்குசாமிக்கும் இந்த திரைப்படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது.

பையா 2 திரைப்படம்:
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அந்த படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது சில திருத்தத்தங்களை செய்து படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்படும். இந்நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கயுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது. பின்னர் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து பையா 2 (Paiyaa 2) கதையை விவரித்ததாகவும், அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

மேலும் படிக்க | விடுதலை பட பட்ஜெட் விவரத்தை பகிர்ந்த வெற்றிமாறன்..! எத்தனை கோடி தெரியுமா..?

ஆனால் இப்போது கார்த்தி, ஆர்யா (Actor Arya) இருவருமே அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக வாரிசு நடிகரின் மகன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹீரோவாக ஆகாஷ் முரளி:
இந்நிலையில் தற்போது கார்த்தி, ஆர்யாவுக்கு பதிலாக இளம் ஹீரோவை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. அதன்படி பையா 2 ஆம் பாகத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷின் அண்ணன் அதர்வாவும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் பையா 2 படத்தில் அதர்வாவின் தம்பியும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

கார்த்தியை விட்டுவிட்டு இளம் ஹீரோவுடன் இணைந்துள்ள லிங்குசாமி, பையா 2 மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆகாஷ் முரளிக்கு (Akash Murali) ஜோடியாக நடிக்கவுள்ளது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பையா 2 இல் ஜான்வி கபூர்:
முன்னதாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி - பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பையா 2 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக  ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் ஜான்வியின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதுகுறித்து ட்வீட் செய்து ஜான்வி கபூர் தற்போது எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்.. எந்த ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News