புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்திய சினிமா படங்களுக்கு விதிக் கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் பல தீவிரவாதிகளும், சில பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
உரி தாக்குதலை தொடர்ந்து இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், இரு நாடுகளுக்கு இடையே இயல்புநிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு தடைவிதிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் சினிமா துறை, அங்கு இந்திய சினிமாக்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டது.
பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான உத்தரவை வெளியிட்டது.
இந்திய சினிமா படங்களை மீண்டும் திரையிட பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. எனவே, இந்திய சினிமா படங்களை திரையிட விதித்த தடை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று முதல் பாகிஸ்தானில் இந்திய சினிமா படங்கள் திரையிடப்படுகிறது.