பொன்னியின் செல்வன் - சோழ தேசம் சென்ற பார்த்திபன் பெருமித பேச்சு

தஞ்சாவூருக்கு சென்ற பார்த்திபன், சோழ தேசத்தில் பொன்னியின் செல்வனை பார்ப்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 30, 2022, 12:57 PM IST
  • பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகியிருக்கிறது
  • படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு
  • பார்த்திபன் தஞ்சாவூரில் படம் பார்த்தார்
 பொன்னியின் செல்வன் - சோழ தேசம் சென்ற பார்த்திபன் பெருமித பேச்சு title=

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் இதனை படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு சினிமா கிடைத்திருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர். 

Parthiban

இந்நிலையில் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபன்; சோழர்களின் தலை நகராக கருதப்படும் தஞ்சாவூருக்கு சென்று திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தார். அதன் பிறகு பேசிய அவர், “தஞ்சாவூர் மண்ணுக்கும், ராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன். நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய்விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். 

பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வனில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்ள். ஆண்களைவிட பெண்கள் புத்திசாலிகள். அதனால்தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 

Parthiban

70 வருஷங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட நாவலுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்களுக்குத்தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்னம் இயக்கத்திற்கு வெற்றி. இத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியதுதான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது எனக்க்கு பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்க்க வந்தேன் என்பதைவிட இந்தப் படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன்” என்றார்.

மேலும் படிக்க | நானே வருவேன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News