வைரலாக பரவும் மகாநதி படத்தின் போட்டோ!

Last Updated : May 31, 2017, 04:37 PM IST
வைரலாக பரவும் மகாநதி படத்தின் போட்டோ! title=

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தாவின் சூட்டிங் ஸ்பாட் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகை சாவித்திரி 60-ம் மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 

இந்நிலையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கவுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின்.

அவர் இந்த படத்திற்கு ‘மகாநதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இவர்களின் சூட்டிங் ஸ்பாட் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Trending News