நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் பொன் மாணிக்கவேல்

பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 10, 2021, 03:40 PM IST
நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் பொன் மாணிக்கவேல்

தமிழில் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வருபவர் பிரபுதேவா. இவரது நடிப்பில் தற்போது பொன் மாணிக்கவேல் படம் உருவாகி உள்ளது. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.

அதேபோல் இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு (Prabhu Deva) ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பொன் மாணிக்கவேல் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் சிக்கல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

Also Read | ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா

இந்நிலையில் தற்போது இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன் படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரும் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தேள், யங் மங் சங், ஊமை விழிகள், பஹீரா, ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Palindrome வார்த்தைகளுடன் முதல் பாடல்; பிரபுதேவாவின் வினோதன் திரைப்படத்தில் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News