பிரபாஸின் ''ராதே ஷியாம்'' First Look வெளியீடு

பாகுபலி நடிகர் பிரபாஸின் 'ராதே ஷியாம்' திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக ஊடங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2020, 12:26 PM IST
  • பிரபாஸ்-பூஜா ஹெக்டேவின் ராதே ஷ்யாம் திரைப்பட ஃபர்ஸ் லுக் வெளியீடு
  • செந்நிறப் பிண்ணனியில் கலக்கும் போஸ்டர்
  • பிரபலங்களும், ரசிகர்களும், சக நடிக-நடிகையரும் படத்தை காண ஆவல்
பிரபாஸின் ''ராதே ஷியாம்'' First Look வெளியீடு

பிரபாஸின் நடிப்பில் வெளிவரவிருக்கும் எதிர்பார்க்கப்பட்ட படமான ''ராதே ஷியாம்''  திரைப்படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். புதிய தோற்றத்தில் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்க பிரபாஸ் தனது சமூக ஊடக கணக்கில் மனதை தொடும் ஒரு குறிப்புடன் ஃபர்ஸ் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

அவருடைய பதிவை பார்த்து ரசித்த ரசிகர்களும். பிரபலங்களும், திரைப்பட நட்சத்திரங்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஃபர்ஸ் லுக் போஸ்டரில் பிரபாஸும் பூஜா ஹெக்டேவும் நெருக்கமாக காணப்படுகின்றனர். பூஜா hegde வின் ஆழ்ந்த சிவப்பு நிற ஆடையில் கண்ணைக் கவர்கிறார்.  அவருடைய ஆடையின் வழியாக ரத்த அலைகள் சுழல்கின்றன. ரத்த-சிவப்பு வானத்தையும், பின்னணியில் கட்டிடங்கள் இடிந்து விழுவதையும் பார்க்க முடிகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

And here it is wishing UV VAmsi , Pramod....PRabhas, Pooja ,director radha krishna and the entire cast and crew all the very very best ‘ #RadheShyam ‘ looking forward ..

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on

#RadheShyam என்ற ஹேஷ்டாக் வைரலாகிறது.   ரசிகர்கள் மட்டுமல்ல, சக நடிகர்களும், ஏன் உலகமே இந்த திரைப்படத்தை காண ஆவலாய் இருக்கிறது.  பிரபாஸின் சர்வதேச அளவில் புகழ்பெற்று, வசூலை அள்ளிக் குவித்த பாகுபலி திரைப்படத்தின் இரு பாகங்கள் வெளியாகி அவரை உச்ச நட்சத்திரமாக்கிவிட்டன.

பாகுபலி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை மட்டும் படைக்கவில்லை, இந்திய திரைப்படங்களில் ஒரு மைல் கல்லாகவும் மாறிவிட்டது.

இந்த நிலையில் ராதே ஷ்யாம் திரைப்படமும் ஒரு பிளாக்பஸ்டர் ஆகும் என்று ஆவலுடன் காத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருக்கிறனர்.   

More Stories

Trending News