பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் first look poster வெளியானது: ரசிகர்கள் ஆரவாரம்

ஒரு அண்டர் வர்ல்ட் அதிரடி திரில்லர் படமாக உருவாகும் 'சலார்' 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 2, 2020, 06:42 PM IST
  • பிரபாசின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது.
  • படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • படம் வெளிவர ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் first look poster வெளியானது: ரசிகர்கள் ஆரவாரம்

புதுடெல்லி: பிரபாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!! ஹோம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிக்கும் தங்களது அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டு விட்டார்கள். நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்தின் தலைப்பு வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திரைப்பட தயாரிப்பாளர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் (Prabhas) கதாநாயகனாக நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் பிரபாசின் மறு பக்கம் காணப்படும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். பிரபாஸ் வன்முறையில் ஈடுபடும், ஆக்ஷன் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் பிரபாஸ் தன் நடிப்பால் தனது ரசிகர்களை திக்குமுக்காட வைக்கவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அண்டர் வர்ல்ட் அதிரடி திரில்லர் படமாக உருவாகும் 'சலார்' 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்கள் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரைப் பகிர்ந்தவுடன், பிரபாஸின் ரசிகர்கள் (Prabhas Fans) தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர். பிரபாசிற்கு இப்படத்திற்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அண்மையில் தான் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, இந்தியா முழுவதும் உள்ள திரை ரசிகர்களுக்கான படமாக இது இருக்கும் என தெரிவித்தது. ஹோம்பலே பிலிம்ஸ் இதற்கு முன்னர் 'ராஜகுமாரா', 'கே.ஜி.எஃப்' (KGF) போன்ற சூப்பர் ஹிட்களுடன் நம்மை மகிழ்வித்துள்ளது. இப்போது ஹோம்பலே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் ஆகிய மூன்று சினிமா மேதைகளுடன் இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளதால், இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் பிரசாந்த் நீலும் இதைப் பற்றி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். "திரு விஜய் கிரகந்தூர் மற்றும் மிகவும் திறமையான நடிகரான பிரபாஸுடன் இணைந்து பணி புரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் குறித்து நாங்கள் பல முறை பேசினோம். இறுதியாக எல்லாம் கைகூடி வந்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை அளிக்க வெண்டும் என்பதுதான குழுவின் விருப்பம். முன்பு கண்டிறாத ஒரு புதிய வடிவத்தில் ரசிகர்கள் பிரபாசை காணவுள்ளார்கள். இப்படத்தில் பிரபாசை அனைவரும் இன்னும் அதிகமாக நேசிப்பார்கள். படத்தை இயக்குவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று அவர் கூறினார்.

ALSO READ: Urmila Matondkar on Kangana Ranaut: தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது

படத்தின் நாயகன் பிரபாஸ் கூறுகையில், "நான் எப்போதும் ஹோம்பலே பிலிம்ஸுடன் இணைந்து பணியாற்ற விரும்பியுள்ளேன். பிரசாந்த் நீல் படத்தை இயக்குகிறார். அவர் ஒரு அற்புதமான இயக்குனர். இதை விட சிறந்த மற்றும் அற்புதமான வாய்ப்பு ஒரு நடிகருக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் உற்சாகமான படம். என கதாபாத்திரம் வன்முறையில் ஈடுபடும் கதாபாத்திரம். இது நான் இதற்கு முன்பு செய்யாத ஒன்று. இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். ஷூட்டிங் துவங்க நான் காத்திருக்கிறேன்." என்றார்.

2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாகப் பாராட்டப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளிவர ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!!

ALSO READ: Wedding Cake: காஜல் அகர்வால்-கெளதம் கிட்ச்லுவின் திருமண கேக்கில் இருந்த ஆச்சரியம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News