பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் 'ரேக்ளா'

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் புதிய திரைப்படத்துக்கு ‘ரேக்ளா’ என பெயர்சூட்டப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:17 PM IST
  • ரேக்ளா என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் பிரபு தேவா
  • ஒலிம்பியா மூவீஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது
  • இயக்குநர் அன்பு படத்தை இயக்குகிறார்
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் 'ரேக்ளா' title=

பிரபுதேவா கடந்த ஆண்டு முதல் டஜன் கணக்கான படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மைடியர் பூதம்’ ‘பஹீரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இந்நிலையில், ’வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் பிரபு தேவா. அந்தப் படத்திற்கு ’ரேக்ளா’ எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

ALSO READ | Instagram ரீல்ஸை கலக்கும் 'ஓ மை மாஸ்டர்' - யூடியூபில் 2 மில்லியன் பார்வை

நடிகர் ஆர்யா இந்தப் படத்திற்கான டைட்டில் லுக்கை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹீரோவாக பிரபு தேவா நடிக்கும் நிலையில், ஜிப்ராம் இசையமைக்க உள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் ‘ரேக்ளா’ தயாரிக்கப்பட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிட உள்ளதாகவும் ‘ரேக்ளா’ குழு தெரிவித்துள்ளது.

சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் டைட்டில் லுக் வீடியோவை பார்க்கும்போது, ரேக்ளா பந்தயத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என தெரிகிறது. இதனிடையே, பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மைடியர் பூதம்’ திரைப்படத்தின்  ‘ஓ மை மாஸ்டர்’ பாடல் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிகம் பேர் டான்ஸ் ஆடும் பாடலாகவும் இந்தப் பாடல் உள்ளது. கடம்பன் மற்றும் மஞ்சப்பை படங்களை இயக்கிய இயக்குநர் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பேண்டஸி படமாக உருவாகியிருப்பதால், இந்தப் படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ், வைரலாகும் போட்டோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News