மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழையும் பிரதீப் ஆண்டனி..?

Pradeep Antony Reentry in Bigg Boss7 House: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, மீண்டும் அந்நிகழ்ச்சிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 01:17 PM IST
  • பிக்பாஸ் போட்டியில் வலுவான போட்டியாளராக இருந்தவர், பிரதீப் ஆண்டனி.
  • இவர், கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
  • இதையடுத்து, இவர் மீண்டும் இந்நிகழ்ச்சிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழையும் பிரதீப் ஆண்டனி..?  title=

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளது, பிக்பாஸ் (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி. ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் தொடங்கப்பட்ட இந்த போட்டி, 2017ஆம் ஆண்டு முதல் தமிழ் மாெழியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் அனைத்து சீசன்களிலும் பரபரப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில், இந்த சீசனில் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் டாப்பிக், “பிரதீப் ஆண்டனி”. 

பிரதீப்பிற்கு ரெட் கார்டு..

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருக்கும் பிரதீப் ஆண்டனி, பிக்பாஸ் 7 போட்டியில் வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டார். போட்டி, கேம்-அதற்கான யுக்தி என இவர் செய்த சில விஷயங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வார எபிசோடின் போது அவருக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் எழுப்பினர். 

கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார் என்ற பிரச்சனையில் ஆரம்பித்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. பிரதீப்பால் தாங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வதாக சில போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் தனியாக அழைத்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார். இதில் பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட் கார்டு (Pradeep Antony Red Card Issue) கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?

பிரதீப்பிற்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள்:

பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல லட்சம் ரசிகர்கள் திரண்டனர். சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பாேட்டியாளர்கள் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனரோ அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தின் வீடியோவையும் எடுத்து வைரலாக்க ஆரம்பித்தனர். அதில் சிலவற்றில் பிரதீப்பின் மீது தவறு அல்ல என்பது போன்ற ஆதாரங்கள் கிடைத்தன. இதற்கிடையில், பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் குழுவாக ஒருவரை மட்டும் டார்கெட் செய்வதாக ரசிகர்கள் கருதினர். இதனால், பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்தவர்கள் மீது ரசிகர்கள் வெறுப்பு காட்டி வருகின்றனர். 

மீண்டும் பிக்பாஸிற்குள் நுழையும் பிரதீப்? 

பிரதீப், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். முதலில் தனது ரெட் கார்டு உள்பட தனக்கு பிக்பாஸ் வீட்டில் கிடைத்த பதக்கங்களை வைத்து “எனக்கு கிடைத்த பரிசுகள்”  என்று பதிவிட்டார். இதையடுத்து கமலின் பிறந்தநாளின் போதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்த அவர் “தீர விசாரிப்பதே மெய்” எனும் ஹேஷ்டேக்கை இணைத்திருந்தார். 

இன்று, இன்னும் இரண்டு ட்வீட்களையும் பிரதீப் வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தை டேக் செய்து “பிக்பாஸ் இல்லத்திற்குள் என்னை மீண்டும் அனுப்புவதாக இருந்தால் என்னை பற்றி தவறாக வதந்தி பரப்பிய இரண்டு போட்டியாளர்களை நீங்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “7வது வாரத்தின் கேப்டனாக என்னை நியமிக்க வேண்டும்” என்றும் கண்டீஷன் போட்டுள்ளார். 

பிரதீப் இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், “என்னிடம் நன்றான விளையாட்டை காட்டினால் நான் உங்களுக்கு நல்ல நிகழ்ச்சியை தருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் இனி நன்றாக நடந்து கொள்வேன் என்றும் ஒரு இடைவேளை முடித்து பழிவாங்கும் படலத்துடன் வரும் படம் போல வருவேன்” என்றும் தெரிவித்துள்ளார். இதனால், பிரதீப் பிக்பாஸ் போட்டிக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: யார் இந்த பிரதீப் ஆண்டனி? இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News