PVR INOXன் புதிய திட்டம்! மாதம் ரூ.699 செலுத்தி 10 படங்கள் பார்க்கலாம்!

PVR INOX மாதாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதன் மூலம் மாதம் 10 படங்களை ரூ. 699 செலுத்தி பார்க்க முடியும்.   

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2023, 07:43 AM IST
  • PVR INOX மாதாந்திர சந்தா திட்டம்.
  • மாதம் 10 திரைப்படங்கள் வரை பார்க்கலாம்.
  • இதற்கு ரூ.699 செலுத்த வேண்டும்.
PVR INOXன் புதிய திட்டம்! மாதம் ரூ.699 செலுத்தி 10 படங்கள் பார்க்கலாம்! title=

இந்தியாவின் முன்னணி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு நிறுவனமான PVR INOX Limited கடந்த சனிக்கிழமையன்று PVR INOX Passport என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக கூறியது. இது ரசிகர்களை தொடர்ந்து திரையரங்குகளுக்கு வர ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதாந்திர சந்தா திட்டமாகும். இதில் ரசிகர்கள் மாதாந்திர கட்டணத்தில் மாதம் 10 திரைப்படங்கள் வரை பார்க்கலாம்.  இந்த புதிய மாதாந்திர சந்தா திட்டம் அக்டோபர் 16 முதல் கிடைக்கும். இந்தச் சந்தாவுக்கான மாதச் செலவு ரூ. 699 ஆகும்.  இந்த மாதாந்திர சந்தா திட்டத்தை திங்கள் முதல் வியாழன் வரை மட்டும் பயன்படுத்தி கொள்ள முடியும் மற்றும் IMAX, Gold, LUXE மற்றும் Director's Cut போன்ற பிரீமியம் சேவைகளில் பயன்படுத்த முடியாது.  

மேலும் படிக்க | லியோ படத்தின் ‘ஸ்பெஷல்’ புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!

PVR INOX Ltdன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா கூறுகையில், "ரசிகர்கள் திரைப்படத்தின் அனுபவத்தை பெற திரையரங்கிற்கு வர விரும்புகின்றனர். ஆனால் அனைவராலும் அதனை பெற முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து மக்கள் வீடுகளிலும், தொலைக்காட்சிகளிலும், மொபைல் போன்களிலும் என்ன பார்க்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.  ரசிகர்கள் மனதில் பதான், ஜவான், சலார், லியோ போன்ற சில பெரிய படங்கள் மட்டுமே திரையரங்களில் பார்க்க விரும்புகின்றனர்.  ஆனாலும், அவர்கள் உண்மையில் சில படங்களை பார்க்க விரும்புகின்றனர்.  ஆனால் அவற்றுக்காக ரசிகர்களால் நேரத்தையும் பணத்தையும் ஒதுக்க முடிவதில்லை. எனவே தான் இப்படி ஒரு ஐடியாவை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்” என்று கௌதம் தத்தா கூறினார். 

மேலும் பேசிய கௌதம் தத்தா, பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க விரும்புகின்றனர்.  நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றார். இதனால், சிறிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகின்றன.  ஒவ்வொரு மாதமும் 13-16 படங்கள் வெளியாகின்றன. எங்களின் இந்த திட்டம் ரசிகர்களை அதிகளவில் மீண்டும் திரையரங்கிற்கு வரவைக்கும்.  நாங்கள் சமீபத்தில் உணவு மற்றும் பானங்களின் விலையை 40 சதவீதம் குறைத்துள்ளோம்.  திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரூ. 99 விலையில் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இந்த முயற்சியால் அதிக படங்களை ரசிகர்கள் திரையரங்கில் பார்ப்பார்கள்.  இது சினிமாவிற்கு பல நன்மைகளை கொடுக்கும்.  இந்த சலுகை மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்த குடிமக்களை அதிகம்  குறிவைக்க விரும்புகிறது என்றார்.  'PVR INOX Passport' திட்டத்தை குறைந்தபட்சம் மூன்று மாத சந்தா காலத்துடன் நேரடியாக அல்லது இணையதளம் வழியாக வாங்கலாம்.  டிக்கெட் புக் செய்யும் போது, ​​பணம் செலுத்தும் விருப்பமாக, ரசிகர்கள் பாஸ்போர்ட் கூப்பனைத் தேர்வு செய்ய வேண்டும்.  நிறைய டிக்கெட்டுகளுக்கான பரிவர்த்தனையின் போது, ​​ஒரு டிக்கெட்டை பாஸ்போர்ட் கூப்பனைப் பயன்படுத்தி ரிடீம் செய்து மீதி பணத்தை செலுத்தலாம்.  

மேலும் படிக்க | ஓவியா to அசீம்-பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News