‘அந்த’ நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய பயந்த ரஜினி! காரணம் தெரியுமா?

Rajinikanth In Lingaa Movie: நடிகர் ரஜினிகாந்த், ஒரு நடிகையுடன் ராெமாண்டிக் காட்சியில் நடிக்கும் போது, மிகவும் பயந்ததாக பழைய பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை யார்? அவருடன் ரஜினிகாந்த் காதல் காட்சியில் நடிக்க பயந்ததது ஏன்?   

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2024, 12:57 PM IST
  • ரஜினிகாந்த் 48 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளார்.
  • ஒரு நடிகையுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பது கடினம் என பேசியுள்ளார்.
  • அந்த நடிகை யார் தெரியுமா?
‘அந்த’ நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய பயந்த ரஜினி! காரணம் தெரியுமா?  title=

தமிழ் திரையுலக நட்சத்திரங்களுள் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளவர், ரஜினிகாந்த். சுமார் 47 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர், ‘லைட்ஸ், கேமரா ஆக்ஷன்’ எனக்கூறியவுடன் தனது கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க ஆரம்பித்து விடுவார். ஆனால், அவருக்கே ஒரு நடிகையுடன் ரொமான்டிக் காட்சியில் நடிக்க பயமாக இருந்ததாம். 

லிங்கா திரைப்படம்:

ரஜினிகாந்தை பல ஹிட் படங்களை இயக்கி கொடுத்தவர், கே.எஸ்.ரவிகுமார். இவர்களின் கூட்டணியில் படையப்பா, முத்து ஆகிய படங்கள் வெளியாகி பல நாட்கள் திரையரங்குகளில் ஓடின. இந்த நிலையில், இவர்கள் 15 வருடங்கள் கழித்து இணைந்த படம், லிங்கா. இந்த படத்தில், ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருப்பர். 

மேலும் படிக்க | விடாமுயற்சி ஓடிடி உரிமை குறித்து அறிவிப்பு!

ரெமான்ஸ் செய்ய பயந்த ரஜினி..

நடிகர் ரஜினிகாந்துடன் அவரது இளமை காலத்தில் காதல் நாயகியாக நடித்தவர்கள் பின்னர் அம்மா-அண்ணி போன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் ரஜினி மட்டும், “ரஜினி அங்கிள்” என்று ஒரு படத்தில் அழைத்த ஒரு குழந்தை வளர்ந்து நாயகியான உடன், அவருடனேயே காதல் காட்சிகளில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்பு வரை, இவர் காதல் காட்சிகளில் நடித்த ஹீரோயின்களுக்கு இவரை விட பாதி வயது குறைவு. அப்படி, தன்னை விட வயதில் மிக மிக குறைந்த சோனாக்ஷசி சின்ஹாவுடன் நடிதத போது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Rajinikanth

நடிகரும் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தையுமான சத்ருஹாசன் சின்ஹா, ரஜினிகாந்துடையை மிக நெருங்கிய நண்பராவார். சோனாக்ஷி, தனது நண்பரின் மகள் என்பதாலும், தன்னை விட வயதில் மிக மிக இளையவர் என்பதாலும் அவருடன் லிங்கா படத்தில் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்க பயந்தாராம் ரஜினிகாந்த். இது குறித்து அன்றைய விழாவில் பேசியிருந்த அவர், லிங்கா படத்தில் ரயில் மீது ஏறி பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகளில் நடிக்கும் போது கூட தனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதில்லை என்றும், ஆனால் சோனாக்ஷியுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் பயந்ததாகவும் கூறினார்.மேலும், தன்னை போல 60 வயது நடிகருக்கு கடவும் கொடுக்கும் பெரிய தண்டனை, டூயட் பாடுவதுதான் என்றும் தெரிவித்திருந்தார். தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவுடன் ஒன்றாக விளையாடி வளர்ந்த குழந்தை சோனாக்‌ஷி என்றும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். அதே போன்ற உணர்வுதான், அனுஷ்கா ஷெட்டியுடன் நடிக்கும் போது தனக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

Rajinikanth

ரஜினி குறித்து பேசிய சோனாக்ஷி..

நடிகர் ரஜினிகாந்த் உடன் காதல் காட்சியில் நடித்தது குறித்து சோனாக்ஷி சின்ஹாவும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது, தனது முதல் தமிழ் படமான லிங்கா படத்தில் நடித்தது தனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்ததாகவும், ரஜினி தன்னிடம் மிகவும் ஸ்வீட்டாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். ஒரு காட்சியில் இருவரும் நெருக்கமாக வந்து நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கூறியதாகவும் அப்போது ரஜினி, “No Close close romance, only far far romance” என்று கூறியதாகவும் சிரித்து கொண்டே கூறினார்.  லிங்கா படத்தில் நடிக்கும் பாேது, ரஜினிகாந்த்திற்கு வயது, 64. சோனாக்ஷி சின்ஹாவிற்கு வயது, 27 என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பாடகி சித்ரா வீடியோவால் சர்ச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News