சூடுபறக்கும் ஜெயிலர் டிக்கெட் விற்பனை... இமயமலைக்கு கூலாக செல்லும் ரஜினி - நாளைக்கு பிளைட்!

Rajnikanth Himalayas Trip: ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக. 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் நாளை இமயலைக்கு பயணம் செல்ல உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 7, 2023, 06:06 PM IST
  • சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் ரஜினி இமயமலைக்கு செல்கிறார்.
  • இம்முறை தனியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்.
  • படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.
சூடுபறக்கும் ஜெயிலர் டிக்கெட் விற்பனை... இமயமலைக்கு கூலாக செல்லும் ரஜினி - நாளைக்கு பிளைட்! title=

Rajnikanth Himalayas Trip: தமிழ்நாட்டில் இணையத்திலும், பொதுவெளியிலும் இப்போதைய பேச்சே 'ஜெயிலர்'. ரஜினிக்கு அண்ணாத்த படத்திற்கு பின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இடைவெளியை அடுத்த இந்த படம் வெளியாக இருப்பது இதன் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வரை படம் குறித்த தற்போதைய அளவுக்கு பேச்சு இல்லாத போதிலும், நல்ல பிரமோஷன் மற்றும் தொடர்ச்சியான அப்டேட்கள் மூலம் மக்கள் மனதில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நன்றாக பதிந்துவிட்டது என சொன்னாலும் அது மிகையாக இருக்காது. 

காவாலா பாடல், Hukum பாடல் என தொடர்ந்து ரசிகர்களிடம் ஆவல் கூடியது. மேலும், படத்தின் டிரைலர் (Jailer Showcase) பல்வேறு தரப்பையும் சென்றடைய, படத்தின் இசை வெளியீட்டு விழா அதை விட பெரும் வீச்சை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், ரஜினியின் படத்திற்கு இதுபோன்ற எதுவுமே தேவையில்லை என்றாலும், இவையனைத்தும் இப்போது போனஸாக ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க |  'ஜெயிலர்' எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!

படம் வரும் ஆக. 10ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் முன்பதிவு நேற்று முன்தினம் (ஆக. 5) தொடங்கி சென்னையில் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தன, மற்ற இடங்களிலும் அதிக கெடுபிடிகளுடன் விற்பனை நடந்தது. அதுமட்டுமின்றி குறிப்பாக சென்னையில் வார இறுதி வரை டிக்கெட்டுகளுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது. வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை சிறப்பு காட்சிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தற்போது வரை அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிகிறது. 

இதனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாகும் என கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அரசு தரப்பில் இது கடுமையாக பின்பற்றப்படுகிறது. பான் இந்திய அளவில் பல மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் 90 சதவீத திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த வகையில், ரஜினி மீண்டும் வசூலில் சாதனை படைக்க காத்திருக்கிறார் என சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் வரத்தொடங்கியுள்ளன. 

இது ஒருபுறம் இருக்க, ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினி நாளை இமயமலைக்கு பயணிக்க உள்ளார். ரஜினி இமயமலைக்கு பயணம் செல்வது புதிதல்ல என்றாலும் கொரோனா தொற்று காரணமாகவும், உடல்நல குறைவு காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. கடைசியாக 2018இல் காலா, 2.0 படங்களை முடித்து இமயமலைக்கு பயணித்தார். அதன்பின், தர்பார் படம் ரிலீஸையொட்டி கொரோனா பரவல் இருந்ததால், அவர் இமயமலை பயணத்தை தவிர்த்தார். 

2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படம் வரை, தனது ஒவ்வொரு படத்தை நடித்து முடித்த பின்னர் அவர் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதன்பின், உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகள் அதனை தவிர்த்தார். இந்த நிலையில், ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு ரஜினி செல்ல இருக்கிறார். 

சுமார் ஒருவார காலம் பயணத்தை திட்டமிட்டுள்ள ரஜினி, பாபாஜி குகை, பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட தலங்களுக்கு செல்ல உள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இந்த முறை தனது மகள்கள் யாருமின்றி, தனியாக இமயமலைக்கு ரஜினி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தமிழ்நாட்டையும் தாண்டி... ஜெயிலர் பட ரிலீஸ் அன்று அடுத்தடுத்து லீவ் விடும் நிறுவனங்கள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News