மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் ராகுல் ப்ரீத்!

தெலுங்கில் உருவாகிவரும் NTR வாழ்க்கை வரலாரு திரைப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் நடிப்பது உறுதியாகியுள்ளது!

Last Updated : Oct 8, 2018, 01:29 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் ராகுல் ப்ரீத்! title=

தெலுங்கில் உருவாகிவரும் NTR வாழ்க்கை வரலாரு திரைப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் நடிப்பது உறுதியாகியுள்ளது!

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகா உருவாக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் நடிகை ராகுல் ப்ரீத் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தெலுங்கு திரைப்பட இயக்குநர் தேஜா இப்படத்தினை இயக்க, தனது தந்தை NTR கதாப்பாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கின்றார். என்.டி.ஆரின் முதல் மனைவி பசவதாரகம் வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி வேடத்தில் அம்மானி நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்தில் நடிகை ராகுல் ப்ரீத் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராகுல் ப்ரீத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

ரவுடி ராமடு கொண்டே கிருஷ்ணுடு(1980), வாயாரி பம்மாளு பாரத்தலு(1982) ஆகிய படங்கள் உள்பட 14 திரைப்படங்களில் ஸ்ரீதேவி மற்றும் NTR இணைந்து நடித்துள்ளனர். எனவே NTR வாழ்க்கை திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதைய திரையுலக பிரபலங்களில் ராகுல் ப்ரீத் தான் ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்துவார் என படக்குழுவினர் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தடையறத் தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர் ராகுல் ப்ரீத். எனினும் கடந்தாண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலமே இவர் தமிழகத்தில் பிரபலமானார். தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத் மூன்று முறை ப்லிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News