தமிழால் இணைவோம் - சிம்பு ட்வீட் செய்ததன் பின்னணி!

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பதிவிட்ட 'தமிழால் இணைவோம்' ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2022, 08:51 PM IST
  • சமீபத்தில் மீண்டும் இந்தி திணிப்பு அதிகமாக பேசப்பட்டது.
  • அமித்ஸா ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை கூறினார்.
  • இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழால் இணைவோம் - சிம்பு ட்வீட் செய்ததன் பின்னணி! title=

சமீபகாலமாகவே ஹிந்தி திணிப்புக்கு எதிராக சாமானிய மக்கள், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார், இதனை பலரும் எதிர்த்தனர்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார், நான் கண்டிப்பாக ஹிந்தி பேசமாட்டேன் என்று கூறினார்.  அதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இதுகுறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் மொழிதான் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

 

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை உடைத்த பூஜா ஹெக்டே!

இவரின் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர், இவ்வாறு பலரும் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஒரு கருத்தால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.  அதாவது நடிகர் சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் "தமிழால் இணைவோம் #TamilConnects" என்று ட்வீட் செய்து இருந்தார்.  இதனை கண்ட இணையவாசிகள் பலரும் சிம்பு ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் என்று கூறி வந்தனர்.  அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும் அவரது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு ட்வீட் செய்ததை போலவே  "தமிழால் இணைவோம் #TamilConnects" என்று ட்வீட் செய்து இருந்தார்.

 

 

இந்த இரு பிரபலங்களின் ட்வீட்களும் இணையத்தில் புயலை கிளப்பியது, பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் இவ்வாறு ட்வீட் செய்ததன் பின்னணி குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது ஆஹா தமிழ் ஓடிடி இயங்குதளம் தமிழ் மொழியில் லான்ச் செய்ய உள்ளது, இதனை ப்ரோமோஷன் செய்யும் விதமாக தான் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் தமிழால் இணைவோம் என்று ட்வீட் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  இந்த தளத்தை ஏப்ரல்-14ம் தேதி தமிழக முதல்வர் அதிகாரபூர்வமாக லான்ச் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

aha

மேலும் படிக்க | ஆட்டோ டிரைவர் ஆன சிம்பு - இணையத்தில் வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News