பீஸ்ட் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை உடைத்த பூஜா ஹெக்டே!

ட்விட்டரில் 'பீஸ்ட்' படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை பூஜா ஹெக்டே பதில் அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2022, 04:31 PM IST
  • முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூஜா.
  • பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளது.
  • விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடித்துள்ளார் பூஜா.
பீஸ்ட் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை உடைத்த பூஜா ஹெக்டே! title=

கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே.  அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றிகண்ட இவர் தற்போது சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் கம்பேக் கொடுக்கும் விதமாக, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார்.  இந்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, ரசிகர்கள் எந்த அளவிற்கு இப்படத்தை காண காத்திருக்கிறார்களோ அதே அளவு, படக்குழுவும் அப்படத்தை காண மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.  படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் குறித்தும், மற்ற தகவல்கள் குறித்தும் ட்விட்டரில் ரசிகர்களுக்கு நடிகை பூஜா ஹெக்டே பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க | பீஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்யின் கடவுள்

ட்விட்டரில் நடிகை பூஜா ரசிகர்களிடம் பீஸ்ட் படம் குறித்த கேள்விகளை #AskPoojaHegde என்ற ஹேஷ்டேக்கின் கீழ் கேட்குமாறு கூறியிருந்தார்.  இதில் ரசிகர்கள் கேட்ட சில சிறப்பான கேள்விகளை தேர்ந்தெடுத்து அந்த கேள்விகளுக்கு வீடியோ வாயிலாக நடிகை பூஜா ஹெக்டே பதிலளித்துள்ளார்.  அதில் ரசிகர் ஒருவர் நிஜ வாழ்வில் பீஸ்ட் பட்டம் தளபதி விஜய்/ பூஜா/ நெல்சன்/ அனிரூத் இவர்களில் யாருக்கு சிறப்பாக பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த நடிகை பூஜா ஹெக்டே நிஜ வாழ்வின் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் என்று வீடியோ வாயிலாக பதிலளித்தார். 

அதனைத்தொடர்ந்து மற்றொரு ரசிகர் பீஸ்ட் படத்தில் உங்களது கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த பூஜா இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ப்ரீத்தி என்று தெரிவித்தார்.  அடுத்ததாக ஒரு ரசிகர் பீஸ்ட் படத்தை எப்போது பார்க்க போகிறீர்கள் என்று கேட்டிருந்தார், அதற்கு அவர் நான் திரையரங்கில் பார்வையாளர்களுடன் சேர்ந்து முதல் நாள் ஷோ பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார்.  பின்னர் ஒரு ரசிகர், விஜயுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நீங்கள் பயணம் செய்தது தற்போது ட்ரெண்டிங்காகியுள்ளது, அதன் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்தவர் அது ஒரு சிறப்பான அனுபவம், அன்றைய தினம் எங்கள் குழுவுடன் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், அது கார் இல்லை விமானம் அதிலும் விஜய் சார் அதை ஒட்டியது இன்னும் சிறப்பான ஒன்று என்று தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து ஒருவர் 10 வருடங்களுக்கு பிறகு நீங்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.  அடுத்ததாக மற்றொரு ரசிகர், பீஸ்ட் ஷூட்டில் உங்களுக்கு மறக்கமுடியாத நாள் எது என்று கேட்டதற்கு, அவர் ஒவ்வொரு நாளும் மறக்கமுடியாத நாள் தான், எங்கள் குழுவினருடன் நான் இருந்த ஒவ்வொரு தருணமும் எனக்கு மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத நாள் தான் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News