RJ Balaji: பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 03:54 PM IST
RJ Balaji: பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி title=

LKG, மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த "Badhaai ho" என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் ஆர்கே பாலாஜி இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு (TN Lockdown) முடிந்தவுடன் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஆர்கே பாலாஜியின் (RJ Balaji) இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு வீட்ல விசேஷங்க என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக பாக்யராஜிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. 

ALSO READ | இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனர் ராமுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

பிரபல இயக்குனர் ராம் தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள், பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கினார் என்பது தெரிந்ததே.

ALSO READ | Kollywood: பட்டையைக் கிளப்பும் பிரேம்ஜி படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்லுக்: ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News