தெறிக்கும் தோட்டாக்கள்.. மாஸ் காட்டும் பிரபாஸ்- சலார் ட்ரெய்லர்

Prabhas Salaar Trailer Is Out: பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 18, 2023, 03:43 PM IST
  • சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
  • டீசரைப் போலவே ட்ரெய்லரும் மிரட்டலாக இருக்கிறது.
  • சலார் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.
தெறிக்கும் தோட்டாக்கள்.. மாஸ் காட்டும் பிரபாஸ்- சலார் ட்ரெய்லர் title=

பிரபாஸின் சலார் படத்தின் ட்ரெய்லர்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது.

சலார் திரைப்படம்:
பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். Salaar Part 1: Ceasefire இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தின் அறிவிப்பு முதல் தற்போது வரை எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.

சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை:
சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை குறித்து பேசுகையில், சலார் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை என முன்னதாக இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறியிருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த கில்மிஷாவின் பரிசு தொகை இவ்வளவா?

சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் ட்ரெய்லர்:
இந்நிலையில் தற்போது சலார் திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் வெளியான சலார் டீசர் செம்ம மிரட்டலாக இருந்த நிலையில், தற்போது ட்ரெய்லரைக் கண்ட மக்கள் டீசரைப் போலவே ட்ரெய்லரும் மிரட்டலாக இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.

டெக்னிக்கல் பிரச்சினையால் தாமதம்:
இதனிடையே கடைசி நேரத்தில் டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக சலார் ட்ரெய்லர் சொன்ன நேரத்தில் வெளியாகமல் போனது. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஹோம்பலே ஃபிலிம்ஸ் அப்டேட் கொடுத்து, இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஹோம்பலே ஃபிலிம்ஸ் அப்டேட் கொடுத்து, இருப்பினும் ட்ரெய்லர் லேட்டாகாவே ரிலீஸ் செய்யப்பட்டது.

முதல் டிக்கெட் ராஜமெளலிக்கு:
முன்னதாக சலார் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் பங்கேற்ற இந்த ப்ரொமோஷன்ஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ராஜமெளலி ஹோஸ்ட் செய்தார். அதில் சலார் உருவானது குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பிரசாந்த் நீல் பகிர்ந்துள்ளார். பிரபாஸ், பிருத்விராஜ் இருவரும் தங்களது சலார் அனுபவங்களை ஷேர் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, சலார் படத்தின் முதல் டிக்கெட் ராஜமெளலிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

100 மில்லியன் சாதனை படைத்த சலார் டீசர்:
முன்னதாக சலார் படத்தின் டீசர் வெளியான இரண்டே நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News