சீதா ராமன்: சொப்னாவுடன் சிக்கிய சுபாஷ், எஸ்கேப்பான சேது..சீதாவின் அடுத்த பிளான் என்ன?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இன்றைய எபிசோட் அப்டேட் இதோ

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 18, 2023, 12:26 PM IST
  • சீதாவை ஊக்கப்படுத்தும் ராம்.
  • அதிர்ச்சி அடைந்த சேது.
  • சுபாஷுக்கு சாப்பாடு ஊட்டி விடும் சொப்னா.
சீதா ராமன்: சொப்னாவுடன் சிக்கிய சுபாஷ், எஸ்கேப்பான சேது..சீதாவின் அடுத்த பிளான் என்ன?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ் சேதுவை சிங் கெட்டப்பில் தயார் செய்து சொப்னா வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சீதாவை ஊக்கப்படுத்தும் ராம்

அதாவது, சீதா, மாமா என எல்லாரும் கார்டனில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது அங்கு வரும் ராம் சீதாவை பார்த்து என்னாச்சு கண் எல்லாம் ஏன் கலங்கி இருக்கு என்று கேள்வி கேட்க அவள் மகாவுக்கு சொப்னா விஷயம் தெரிஞ்சிடுச்சு போல, அப்படினா இந்த கல்யாணத்தை நடத்துறது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல அம்மா இருந்து இருந்தா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சி இருப்பாங்க என்று ராம் சொல்ல மாமா துரை அதான் சீதா இருக்காளே என்று சொல்ல ராம் ஆமா சீதா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பா என்று ஊக்கப்படுத்துகிறான். 

அதிர்ச்சி அடைந்த சேது

மறுபக்கம் சுபாஷ் சேதுவை கெட்டப் மாற்றி சொப்னா வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

அங்கு சுபாஷ் சொப்னா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி .சொப்னா சுபாஷை பார்த்ததும் கட்டி பிடித்து காதலை வெளிபடுத்தி தெலுங்கு பாட்டுக்கு டூயட் எல்லாம் பாட சேது ஒன்றும் புரியாமல் நிற்கிறான். பிறகு சுபாஷ் தனியாக இருக்கும் போது யார் என்ற விஷயம் கேட்க ஐதராபாத் சென்றிருந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்ல சேது அதிர்ச்சி அடைந்து திட்டுகிறார். 

மேலும் படிக்க | ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் தொடர் இதுதான்..! திரைப்பிரபலம் பகிர்ந்த தகவல்..!

சுபாஷுக்கு சாப்பாடு ஊட்டி விடும் சொப்னா

இங்கே துரை மூலமாக சுபாஷ் சொப்னா வீட்டுக்கு சென்றிருக்கும் விஷயம் சீதாவுக்கு தெரிய வர எல்லாரும் அங்கே கிளம்பி செல்கின்றனர். சொப்னா சுபாஷுக்கு சாப்பாடு ஊட்டி விட சேது வீட்டை விட்டு வெளியே வர ராம், சீதா, துரை ஆகியோர் வர முகத்தை மூடிக்கொண்டு எஸ்கேப்பாக முயற்சி செய்ய இவர்களுக்கு சந்தேகம் வருகிறது. உடனே சேது வலிப்பு வந்தது போல ட்ராமா போட்டு ஓடி விடுகிறான். அடுத்ததாக இவர்கள் சொப்னா வீட்டிற்குள் நுழைய சுபாஷ் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஓடிடியில் வரிசையாக ரிலீசாகும் படங்கள்..! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News