சீதா ராமன் அப்டேட்: மகாவின் முகத்திரை கிழியுமா? விறுவிறுப்பின் உச்சத்தில் சீதா ராமன்

Seetha Raman Today's Episode Update: சூர்யாவை சந்திக்கும் சீதா, கிழியுமா மகாவின் முகத்திரை? சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2023, 11:53 AM IST
  • திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
  • சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

Trending Photos

சீதா ராமன் அப்டேட்: மகாவின் முகத்திரை கிழியுமா? விறுவிறுப்பின் உச்சத்தில் சீதா ராமன் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு அனைவரும் வாந்தியெடுக்க சீதாவும் மீராவும் இதை பார்த்து சிரிக்கின்றனர். இதனால் கடுப்பாகும் மகா உங்க எல்லாருக்கும் அந்த வேலைக்காரி சமையலை சாப்பிட்டு பழகிடுச்சு என திட்டி தீர்க்கிறாள். 

அதன் பிறகு ராம் ரூமுக்கு வர சீதா கவலைப்படாதீங்க பாஸ் உங்களுக்காக நான் கஞ்சி எடுத்து வைத்திருக்கேன் என சொல்லி கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுக்க அதை சாப்பிடும் ராம் சிம்பிளாக இருந்தாலும் நல்ல டேஸ்ட்டாக இருக்கு என சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என் கேட்க இதோ கொண்டு வரேன் பாஸ் என சீதா கீழே வருகிறாள். 

நக்கல் செய்யும் சீதா

கீழே வந்து பார்க்கும் போது மகா உட்பட எல்லாரும் அந்த கஞ்சியை மறைந்து மறைந்து சாப்பிட்டு கொண்டிருக்கு சீதா அவர்களை நக்கல் அடிக்கிறாள். பிறகு பாஸ் நல்லா இருக்குனு இன்னும் கொஞ்சம் கேட்டாரு, அதான் வந்தேன். பரவால்ல நீங்க சாப்பிடுங்க, நான் அவர்கிட்ட சொல்லுறேன் என மேலே வந்து விசயத்தை சொல்ல ராம் எனக்கு பசி இல்ல நல்லா இருக்கவே கேட்டேன் சொல்ல சீதா நான் சமைத்து தரவா என கேட்க ராம் வேண்டாம் என சொல்கிறான். 

மறுநாள் காலையில் சூர்யாவை சந்திக்கும் சீதா மகாலட்சுமி நல்லவள் இல்லை என சொல்ல சூர்யா நீ உங்க அப்பா பேச்சை கேட்டுட்டு வந்து பேசுற, மகா தான் எங்களை சேர்த்து வைச்சது என கோபப்பட சீதா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள். 

மேலும் படிக்க | Sunny Leone Birthday: இவருக்கு இப்படியொரு பழக்கமா? சன்னி லியோன் குறித்து யாரும் அறியாத தகவல்கள் சில!

சூர்யாவை வீட்டுக்கு அழைக்கும் சீதா

மேலும் நீங்க வீட்டிற்கு வந்து ரிஷப்சன் போட்டோக்களை பாருங்க என சொல்ல சூர்யா அதனால தான் நாங்க பிரிந்தோம் என சொல்ல சீதா மகாவின் முகத்திரையை கிழிக்க சூர்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!

மேலும் படிக்க | 4 காதல்களை கடந்துவிட்டேன் மனம் திறந்த பாரதிராஜா...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News