சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்... வைரலாகும் வீடியோ!

சன்னி லியோன் செய்த வொர்க் அவுட் சேலஞ்ச் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அந்த சேலஞ்சை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2022, 12:40 PM IST
  • Y சேலஞ்சை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.
  • சன்னி லியோன் போல் நின்று வீடியோ வெளியீடு.
  • இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.
சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்... வைரலாகும் வீடியோ! title=

சமூக வலைத்தளங்களில் பலரும் ஒவ்வொரு செயல்களை செய்து அதை போல் மற்றவரும் செய்ய சேலஞ்ச் செய்து வருகின்றனர்.  வொர்க் அவுட் செய்வது, நடனம் ஆடுவது, சாப்பிடுவது என்று பல சேலஞ்ச் ட்ரெண்டாகி வருகிறது, இதனை பல பிரபலங்களும் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் பிரபல நடிகை சன்னி லியோன் செய்திருக்கும் வொர்க் அவுட் சேலஞ்ச் பயங்கர ட்ரெண்டாகி உள்ளது.  பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தற்போது சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார், இவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்கிற படம் விரைவில் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.  மேலும் நடிகை சன்னி லியோன் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார், விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

shruthi

மேலும் படிக்க | ஓடிடியில் இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்!

இவர் படங்களில் பிசியாக இருப்பது போல சமூக வலைத்தளங்களில் படுபிஸியாக இருந்து வருகிறார், அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது ஒரு வொர்க் அவுட் சேலஞ்ச் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தலைகீழாக நின்று ஆங்கில எழுத்தான 'Y' வடிவத்தில் நிற்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார், இந்த வொர்க் அவுட் வீடியோவை பதிவேற்றியவர் இதனை போல மற்றவர்களையும் செய்ய சொல்லி சேலஞ்ச் செய்து இருக்கிறார்.  இவரது வொர்க் அவுட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு இணையாவாசிகள் பலரும் இதே போல செய்து ட்ரெண்டாக்கி வந்தனர்.

 

இந்நிலையில் நடிகை சுருதி ஹாசனும், சன்னி லியோனின் இந்த வொர்க் அவுட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு ட்ரெண்டிங் வரிசையில் சேர்ந்து இருக்கிறார்.  சன்னி லியோன் போலவே கருப்பு நிறத்தில் உடை அணிந்துகொண்டு அழகாக  'Y' வடிவத்தில் போஸ் கொடுத்துள்ளார்.  இந்த  'Y சேலஞ்சை' பலரும் ஏற்றுக்கொண்டு செய்து வரும் நிலையில், தற்போது சுருதிஹாசன் செய்திருப்பது மேலும் ட்ரெண்டாகியுள்ளது.  தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார், இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | புஷ்பா-2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தால் வந்த ஆபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News