தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!

சிம்பு ஒரு சிறந்த நடிகர் என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 10:59 AM IST
  • சிம்பு திறமையானவர்..புகழாரம் சூட்டிய கவுதம் மேனன்.
  • வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
  • வீட்டை விட்டு மும்பைக்கு இடம்பெயரும் 21 வயது இளைஞனை பற்றிய கதை.
தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!  title=

குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி தற்போது சிறந்த கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கின்றார் சிம்பு.  இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல திறமைகளை கொண்டிருக்கிறார்.  சிறிது நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தவர் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாக ஈஸ்வரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.  அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாநாடு படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.  இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து சிம்புவிற்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து அவர் படுபிஸியாகி விட்டார்.

மேலும் படிக்க | நடிகர் அல்லு அர்ஜுன் மீது திடீர் வழக்கு- மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!

 

வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது மூன்றாவது முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார், இந்த இருவரின் காம்போவில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  2010ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது, இப்படத்தின் ஒவ்வொரு டயலாக்குகளும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.  அடுத்ததாக 2016ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.  தற்போது படத்தின் இயக்குனர் கவுதம் மேனனிடம் நடத்தப்பட்ட சமீபத்திய பேட்டியொன்றில் சிம்பு ஒரு திறமையான நடிகர், பெரிய பாடகர் என்று கூறுகிறீர்கள்.. அவர் எப்படி, அவரை பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்தவர், நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதன்படியே அவர் கேமரா முன்னிலையில் நடிப்பை வெளிப்படுத்துவார்.  எவ்வளவு பெரிய ஹீரோவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்கள், ஆனால் சிம்பு செய்தார்.  இதுவரை சிம்பு நடித்திராத வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது.  வீட்டை விட்டு மும்பைக்கு இடம்பெயரும் 21 வயது இளைஞனை பற்றிய கதை தான் இந்த படம், ஆரம்பத்தில் ஜெயமோகன் சார் என்னிடம் இந்த கதையை யாரேனும் புது முகத்தை வைத்து பண்ணுங்கள் என்று கூறினார்.  ஆனால் நான் சிம்புவை வைத்து பண்ண ஆசைப்பட்டேன், அவரும் இதில் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டார், அவர் எங்கள் முன் 21 வயது இளைஞனாக மாறியதை கண்டு நாங்கள் வியந்தோம் என்று சிம்புவை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க | நடிகர் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News