தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் மோதும் சிம்பு!

சிம்புவின் மாநாடு திரைப்படம் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துடன் தீபாவளி அன்று களத்தில் இறங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2021, 02:27 PM IST
தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் மோதும் சிம்பு!  title=

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாக எந்த படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் செல்லாமல் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  மேலும் அவரது உடல் எடையும் அதிகமாகி தோற்றமளித்தார்.  அவரது நடிப்பில் வெளிவந்த AAA, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன.  அதன்பின் கொரோனா ஊரடங்கில் மிகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு தனது உடல் எடையை குறைத்து தற்போது பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் தோற்றம் அளிக்கிறார் சிம்பு.

simbu

சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் மாநாடு திரைப்படம் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்தது.  இதன்பின் கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  பின் படப்பிடிப்பிற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததும், 30 நாட்களில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.  இந்த திரைப்படம் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துடன் பொங்கல் அன்று வெளியானது.  இதற்கு முன் 2012ஆம் ஆண்டு விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்துடன் சிம்புவின் போடா போடி திரைப்படம் வெளியானது. 

tuppaki

இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியில் சரியான வெற்றியடையவில்லை.  இருப்பினும் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துடன் சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.  2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்டை திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்தது.  தற்போது 2021 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ரஜினியின் அண்ணாதுரை திரைப்படம் வெளியாகும் என்று அப்பட நிறுவனம் அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து சிம்புவின் மாநாடு திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகும் என்று சிறிது நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது.  மேலும் தீபாவளி தினத்தில் வேறு சில திரைப்படங்களும் வெளியாக உள்ளன. 

simbu

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் தினத்தில் சிம்பு தனது படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.   நேற்று சிம்பு தனது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற புதிய திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News