நகைச்சுவை நடிகர் புரோட்டா சூரிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி பிறந்தநாள்

நகைச்சுவை நடிகர் சூரி (Soori) இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2021, 02:02 PM IST
நகைச்சுவை நடிகர் புரோட்டா சூரிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி பிறந்தநாள் title=

சென்னை : "நகைச்சுவை நடிகர் சூரி (Soori) இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் சின்னஞ் சிறு வேடங்களில் ஒரு சில படங்களில் வந்து சென்று கொண்டிருந்த சூரிக்கு அவரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படமென்றால் அது வெண்ணிலா கபடி குழு (Vennila kabadi kuzhu) 9படமாகும்.

"அப்படத்தில் அவர் புரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்தது அவரை தமிழக மக்களின் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. சூரி என்றிருந்த அவரின் பெயர் வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு புரோட்டா (Parotta Soori) சூரி என்றாகிப் போனது. அதற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் ஏறுமுகம்தான்! விஜய்,அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என எல்லோருடைய படங்களிலும் நடித்து விட்டார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் (Rajinikanth) நடித்து வருகிறார்.

"இந்நிலையில் தனது 44வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது ரசிகர்களுடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார். இன்று புரோட்டா சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரின் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். 

சூரி வெளியிட்ட அந்த வீடியோவினை குறிப்பிட்டு "சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) எதிர் நீச்சல் அடி! வென்று ஏற்று கொடி! என்றும் அண்ணே சூப்பரா இருக்கீங்கணே! இனிமேல் ஃபுல்லா ஹீரோதான் நாங்க இனிமே சங்கத்திற்கு வேற செயலாளர் தான் பாக்கணும் போல! என்றும் என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

"மற்றொருபுறம் இதேபோன்று நடிகர் விஜய் சேதுபதியும் (Vijaysethupathi) அவருடைய ட்விட்டர் பக்கத்தில் "ஹேப்பி பர்த்டே மாமா என்று சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.!

 

 

நாமும் நம் பங்குக்கு சொல்வோம்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரி சார்! நீங்கள் இன்னும் உங்களது நகைச்சுவையால் எங்களை என்றென்றும் சிரிக்க வைத்து கொண்டே இருக்க வேண்டும்.

ALSO READ | தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News