முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்...

கோலிவுட் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

Updated: Nov 21, 2019, 12:47 PM IST
முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்...
Pic Courtesy: twitter/@actorsathish

கோலிவுட் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்நிலையில் தற்போது திருமண வேலையை இருவீட்டார்களும் கவனித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சதீஷ் தனது திருமண அழைப்பிதழை பிரபலங்களுக்கு வழங்கும் பணியை துவங்கியுள்ளார். அந்த வகையலிஃ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்துள்ளார்.

’தமிழ் படம்’, ’எதிர் நீச்சல்’, ‘கத்தி’, ’தங்க மகன்’. ‘ரெமோ’ போன்ற  படங்களில் நடித்து, தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தார் நகைச்சுவை நடிகர் சதீஷ். இறுதியாக இயக்குநர் சாச்சியின் ’சிக்ஸரில்’ முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைபவ் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் பல்லக் லால்வானி ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ரத்னா சிவாவின் ஆக்‌ஷன் திரைப்படமான ’சீரு’, த்ரிஷா மற்றும் சிம்ரன் நடிக்கும் ’சுகர்’, இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜனின் ’டெடி’ ஆகியப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் சதீஷ்.

சமீபத்தில் நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தனது திருமண அழைப்பிதழினை பிரபலங்களுக்கு நடிகர் சதீஷ் அளித்து வருகின்றார்.