'ஸ்பைடர்' படத்தின் டீசர் நாளை வெளியீடு

Last Updated : Aug 8, 2017, 11:08 AM IST
'ஸ்பைடர்' படத்தின் டீசர் நாளை வெளியீடு title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. 

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படுத்தியது.

 

 

Trending News