‘பீஸ்ட்’டுல எந்தக் காட்சிகளை நீக்குனாங்கனு தெரிஞ்சிக்கணுமா? இதைப் படிங்க!

தியேட்டர்களில் பீஸ்ட் திரைப்படம் தொடர்ந்து வசூல் குவித்துவரும் நிலையில் இப்படத்தின் 'deleted scenes' பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2022, 11:07 AM IST
  • நடிகர் விஜய்யின் பீஸ்ட் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
  • தியேட்டர்களில் பீஸ்ட் தொடர்ந்து வசூல் குவித்துவருகிறது.
  • இப்படத்தின் 'deleted scenes' பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’டுல எந்தக் காட்சிகளை நீக்குனாங்கனு தெரிஞ்சிக்கணுமா? இதைப் படிங்க! title=

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தாலும் தியேட்டர்களில் தொடர்ந்து வசூல் குவித்துவருகிறது. வசூலில் பல்வேறு புதிய சாதனைகளையும் இப்படம் படைத்துவருகிறது.

இப்படத்தில் வீரராகவன் என்ற RAW ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் பயங்கரவாதக் கும்பலிடமிருந்து நடிகர் விஜய் மக்களைக்  காப்பாற்றினாரா இல்லையா என விவரிப்பதே இப்படத்தின் ஒன்லைனாக அமைந்துள்ளது. சென்சாரில் U/A சான்றிதழ் பெற்ற இப்படத்தின் ரன்னிங் டைமைப் பொறுத்தவரை 2 மணி 36 நிமிடங்களாக இருந்தது. முதல் பாதியின் நீளத்தைவிட இரண்டாம் பாதியின் நீளம் சுமார் அரைமணி நேரம் குறைவாகவே இருந்தது.

மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

                                         Beast Vijay

இந்நிலையில் இப்படத்தின் 'deleted scenes' பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் படத்தின் நீளம் மற்றும் சென்சார் விதிமுறைகள் காரணமாக சில காட்சிகள் நீக்கப்பட்டே படம் வெளியாகியுள்ளதாம். குறிப்பாக, இப்படத்தில் பயங்கரவாதிகளை விஜய் ஒப்படைத்த பின்னர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்வதுபோல காட்சி இருந்த நிலையில் அது நீக்கப்பட்டதாம்.

அதேபோல, ஷாஜி நடித்திருந்த அமைச்சர் கதாபாத்திரம் பயங்கரவாதிகளுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக கைதுசெய்யப்படுவதுபோலவும் காட்சி இருந்த நிலையில் அதுவும் நீக்கப்பட்டுள்ளதாம். பீஸ்ட் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் VS வலிமை: முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எது தெரியுமா!?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News