விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுக்க நேற்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் அமெரிக்காவில் 426 தியேட்டர்களில் வெளியாகி, அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியான விஜய் படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக இந்தப்பட்டியலில் விஜய்யின் பிகில் இருந்தது. கத்தார், குவைத் நாடுகளில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் இதனால் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஆக்சன் காட்சிகளால் நிரம்பி வழியும் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அதேநேரம் பார்வையாளர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தியேட்டர்கள் நிரம்பிவழிகின்றன. ஏராளமான தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?
அந்த வகையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் (gross) வசூல் செய்துள்ளதாம். சென்னையில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் கொரோனா காலத்துக்குப் பின்னர் வெளியான திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாகவும் இது அமைந்துள்ளது. அந்த வகையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை விஜய்யின் பீஸ்ட் முறியடித்துள்ளதாம்.
அதேபோல தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த விஜய் படங்களின் பட்டியலில் இப்படம் 2ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியான விஜய்யின் சர்கார் படம் உள்ளது.
மேலும் படிக்க | அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR