ஒரு படம் வெற்றி அடைந்தால் அதன் முழு பெருமையும் ஹீரோவுக்கு மட்டுமே சென்றடைகிறது. அதுவே தோல்வி அடைந்தால் முழு பொறுப்பும் இயக்குனர்களின் மேல் விழுந்து விடுகிறது. இதனால்தான் என்னமோ பல இயக்குனர்கள் இன்று நடிகர்களாக மாறியுள்ளனர்.
பதினாறு வயதினிலே, முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள் போன்ற அற்ப்புதமான படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி நடித்து கொண்டிருக்கிறார். சின்ன வீடு, முந்தானை முடிச்சு போன்ற படங்களில் தானே இயக்கி நடிக்க தொடங்கினார் பாக்யராஜ். ஆட்டோகிராப் போன்ற காலத்தால் அழியாத படங்களை இயக்கிய சேரன் தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
மனோபாலா, கே.எஸ்.ரவிக்குமார், ராம், வெங்கட் பிரபு, அமீர், எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், சமுத்திரக்கனி, சுந்தர் சி, பார்த்திபன், விசு, சீமான் என தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் தற்போது நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். சிலர் ரெண்டிலும் கவனம் செலுத்துகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் போன்ற படத்தை இயக்கிய செல்வராகவனும் சாணி காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது கோமாளி பட இயக்குனராக பிரதீப்ம் இணைத்துள்ளார். தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதீப் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை பற்றிய அறிவுப்பு சமீபத்தில் வெளியானது. தனது இரண்டாவது படத்தை ஒரு பெரிய ஹீரோவை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்த பிரதீப் அவரே ஹீரோவாக களம் இறங்கவுள்ளார். மேலும், நடிகர்களாக இருந்து சிலர் இயக்குனர் அவதாரங்களும் எடுத்துள்ளார்.
Its the first time prestigious @Ags_production is introducing a male lead & im very happy that its me . Get ready guys , your gona enjoy it .
Thankyou #KalpathiAghoram #KalpathiGanesh #KalpathySuresh @archanakalpathi @aishkalpathi @onlynikil @venkatmanickam5 #PR2 #Ags22 pic.twitter.com/AyNZ4QF9ad— Pradeep Ranganathan (@pradeeponelife) October 4, 2021
ALSO READ மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR