அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறார் சிறுத்தை சிவா...

நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குவது உறுதி படுத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Updated: Oct 11, 2019, 06:17 PM IST
அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறார் சிறுத்தை சிவா...
Screengrab

நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குவது உறுதி படுத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்துடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து நான்கு திரைப்படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, தற்போது தலைவர் ரஜினியின் 168-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு ஒரே நாளில் துவக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் நடித்த பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரு திரைப்படங்களும் ஒன்றாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தல ரசிகர்கள் மட்டும் அல்லாமல், தலைவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்வை தொடங்கிய சிவா, கடந்த 2002-ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 

இதனைத்தொடர்ந்து டோலிவுட்டி பக்கம் சென்ற சிவா, 2008-ஆம் ஆண்டு சௌர்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக சிவா அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததையடுத்து சிறுத்தை 'சிவா' என்று  சினிமா ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார். 

பின்னர் மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கியபின்னர் நடிகர் அஜித்துடன் சேர்ந்த சிவா., 2014-ம் ஆண்டு துவங்கி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் அடுத்தடுத்து திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டனர்.

தல அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்ற சிறுத்தை சிவா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கு புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.