சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்

Last Updated : Dec 12, 2016, 09:59 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் title=

தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று பிறந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார், இவரது இயர் பெயர் வாஜி ராவ் கெய்க்வாட்.

ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பெங்களூரில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். 

இந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் அவர்கள் அங்கே பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட காரணத்தால் அவரது மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். 

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 

1975-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராக மாறி உள்ளார்.

ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். 
பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். 
பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. 
தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். 

பொதுவாக ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளா

Trending News