Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?

Suriya 44 Update: இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2024, 10:39 AM IST
  • இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்.
  • சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.
  • கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.
Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்? title=

Suriya 44 Update: இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

நடிகர் சூர்யா:
கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. திரைத்துறையில் பெரிய கலைஞராக விளங்கிய சிவகுமாரின் மகனான இவரும், சினிமா கனவுகளுடன்தான் வளர்ந்தார். 22 வயதில் ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா தொடர்ந்து மென்மையான ஹீரோவின் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். விஜய்-அஜித்திற்கு எந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே கூட்டம் இவருக்கும் இருக்கிறது. 

வித்தியாச கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர் சூர்யா:
காதல்-காமெடி-கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தனது கதை செலக்ஷனில் வித்தியாசம் காட்டி வருகிறார். சூரரை போற்று படமும், ஜெய் பீம் படமும் அதற்கு பெரிய உதாரணம். தனது படங்கள் மூலம் சமூக கருத்து பேசி வரும் இவர், பொது வெளியிலும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு ‘அறம்’ அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். 

மேலும் படிக்க | யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ

அது மட்டுமன்றி, இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் இருக்கின்றன. எனவே, தொடர்ந்து பல தமிழ் சினிமா இயக்குநர்களும் இவரிடம் கதை கூறும் முனைப்பில் இருக்கின்றனர். 

2 ஆண்டுகளாக படங்கள் வெளியாகவில்லை:
நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக நடித்திடிருந்த படம், எதற்கும் துணிந்தவன். இந்த படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஹிட் அடித்தாலும் விமர்னத்தில் கொஞ்சம் சறுக்கியது. அதன்படி பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு கமலின் விக்ரம் படத்தில் 7 நிமிட கேமியோ ரோலில் நடித்தார், அதன் பிறகு மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கதையின் நாயகனாக இவரது படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. 

சூர்யா 44:
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சூர்யா நடிக்கவிருக்கும் அவரது 44வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்தியின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. அதனுடன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 

சூர்யா 44 வீடியோ வைரல்:
இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது சூர்யா 44 படத்தின் டீசர் ஒன்று வெளிவந்துள்ளது. மேலும் அதில் 'தி ஒன்' என்று வருவதால், ஒருவேளை சூர்யா 44 படத்தின் டைட்டில் 'தி ஒன்'னாக இருக்குமா? என்கிற கேள்வி தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | 'ரகு தாத்தா' ஹிந்திக்கு எதிரான படமா? கீர்த்தி சுரேஷ் சொன்ன விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News