யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ

Yogi Babu Net Worth: தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியான நடித்து வரும் நடிகர்களில் ஒருவரான காமெடி நடிகர் யோகிபாபுவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 22, 2024, 03:35 PM IST
  • 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும், நடிகர் யோகி பாபு.
  • முழு சொத்து மதிப்பானது 50 கோடி முதல் 70 கோடி வரை இருக்கலாம்.
யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ title=

Happy Birthday Yogi Babu, Net Worth Of Yogi Babu: இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும், நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.

நடிகர் யோகி பாபு:
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாபு. அந்த நிகழ்ச்சியில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமே அவருடைய அடையாளப் பெயராக மாறியது. இதைத் தொடர்ந்து பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, ஐ என அனைத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் பங்கு பெரும் முக்கிய நடிகராக மாறிவிட்டார் யோகி பாபு. 

இந்தி நடிகர் ஷாருக்கானில் இருந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் வரை பலருடன் நடித்து விட்டார் யோகி பாபு (Actor Yogi Babu). ஆரம்பத்தில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராகவும் கூட்டத்தில் ஒருவராகவும் இருந்தார். கலகலகப்பு படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பெரிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு இவரை பலரும் ‘பன்னி மூஞ்சி வாயன்’ நடிகர் என்று அழைத்தனர். கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் உருவ கேலி, தன் தோற்றம் குறித்து பேசி மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். மேலும் இந்த ஆண்டு இவர் நாடிபில், கஜானா, கோட், கங்குவா, அந்தகன், தி ராஜ சாப், மெடிக்கல் மிராக்கல் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இதோ

நடிகர் யோகி பாபு சம்பளம்: 
தற்போது தமிழ் சினிமாவின் (Tamil Cinema) பிஸி காமெடி நடிகராக கையில் ஏகப்பட்ட படங்களுடன் இருக்கும் நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடிப்பதற்கு இவர் சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சின்ன படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய படங்களில் கோடியை தொடும் அளவுக்கு யோகி பாபுவின் சம்பளம் இருந்து வருகிறது.

யோகி பாபு சொத்து மதிப்பு:
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு (Yogi Babu Net Worth) எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பானது 50 கோடி முதல் 70 கோடி வரை இருக்கலாம் என இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News