விஜய் சூர்யா திடீர் சந்திப்பு – நடந்தது என்ன?

நடிகர் விஜய்யும், சூர்யாவும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 10, 2021, 01:39 PM IST
விஜய் சூர்யா திடீர் சந்திப்பு – நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள்.

நடிகர்கள் விஜய் (Vijay) மற்றும் சூர்யா (Suriya) ஆரம்ப காலங்களில் நேருக்கு நேர், Friends ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இரண்டு படங்களுமே பெரிய வெற்றியையும் பதிவு செய்தது, அதே நேரத்தில் அவர்கள் இருவருக்குள்ளான நட்புறவையும் வளர்த்தது. அதன் பின் விஜய் சூர்யா இருவருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஆகிவிட்டதால் இணைந்து நடிக்கவில்லை.

ALSO READ | இணையத்தில் வைரலாகும் சமந்தா - நயன்தாராவின் BTS புகைப்படங்கள்

இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். இதற்கிடையில் சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

No description available.

இந்நிலையில் நேற்று இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றபோது நடிகர் விஜய்யும், சூர்யாவும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் இயக்குநர்கள் நெல்சன் திலீப் குமாரும், பாண்டிராஜும் இருந்துள்ளனர். 

No description available.

திரையில் மிகவும் ரசித்துப் பார்க்கப்பட்ட விஜய், சூர்யா ஜோடி சந்தித்துக் கொண்ட தகவல் இருவரின் ரசிகர்களையுமே மகிழ்ச்சியில் ஆழித்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது எந்த வித போட்டோக்களும் எடுக்கப்படவில்லையாம். அப்படி எடுத்திருந்தால், அது அவர்களின் கெட்டப் கசிய வாய்ப்பிருக்கிறது என்பதால் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? அல்லது, போட்டோ எடுத்துவிட்டு, படம் ரிலீஸ் ஆனதும் ரிலீஸ் செய்துவிடலாம் என வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.

ALSO READ | தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News