சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த நடிகை, அடுத்ததாக சூர்யா இன் 40வது படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 20, 2021, 03:12 PM IST
சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 

சூர்யாவின் (Suriya) இந்த படத்தை கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா-40' (#Suriya40எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். 

ALSO READ | சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyanடாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். 

நடிகை பிரியங்கா ‘சூர்யா 40’ படத்தில் நடிப்பது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | #Suriya40 படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட் செய்த முக்கிய அப்டேட்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News