சூர்யாவின் செம குத்து...! எதற்கும் துணிந்தவனின் ’முதல் சிங்கிள்’ நாளை

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் நாளை மாலை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 14, 2021, 08:34 PM IST
சூர்யாவின் செம குத்து...! எதற்கும் துணிந்தவனின் ’முதல் சிங்கிள்’ நாளை title=

 

எதற்கும் துணிந்தவன் அப்டேட் ஜெட் வேகத்தில் படக்குழு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. படம் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. உடனே, படம் அடுத்த ஆண்டு பிப்வரி 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, திங்கட்கிழமை அடுத்த அப்டேட்டைக் கொடுத்தது. அதாவது படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவித்தது. 

ALSO READ | மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’

இந்த அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் அடுத்த அப்டேட்டை எதற்கும் துணிந்தவன் டீம் வெளியிட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், நாளை மாலை 6 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என தெரிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் எழுத்தில், இமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிரூத் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர். பாடலுக்கான புரோமோவில் கிராமத்து குத்து இசைக்கு சூர்யா ஆட்டம்போடுகிறார். இந்த புரோமோவே பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  ஜெய்பீம் படத்தில் விளிம்பு நிலை மக்களான குறவர் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகளைக் காட்சிப்படுத்திய சூர்யா, எதற்கும் துணிந்தவனில் குடும்ப கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் சமூகம் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து கருத்துள்ள படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

ALSO READ | Valimai Update: மாஸ் என்பது யாதெனில்..! வலிமை மேக்கிங் வீடியோவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

 சூர்யாவின் ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் கடந்த இரு படங்களையும் தியேட்டர்களில் பார்த்து ரசிக்க முடியாமல் இருந்த அவரது ரசிகர்கள், இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாட எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News