காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருந்து ஓப்போ, ரெட்மி மற்றும் பிளாக்பெரி, ஐபோன் போன்ற 9 வகையான செல்போன் நிறுவனங்களுக்கு, செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சீன செல்போன் நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | Foxconn வரி ஏய்ப்பு புகார்; நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை!
பாக்ஸ்கான் தொழிற்சாலையிலும், அதற்குள் இருக்கும் சீன நிறுவனங்களின் தொழிற்சாலையிலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கொட்டிவாக்கம் நேரு நகரில் ஓப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ள சீன நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை அரங்கேறியது.
இந்நிலையில், சீன செல்போன் உதிரி பாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வந்த விஜயின் உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ‘கெர்ரி லாஜிஸ்டிக்’ நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில், சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ராயப்பேட்டை, மண்ணடி பகுகளில் உள்ள அலுவலகங்களில் 4-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ALSO READ | மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு கொள்ளை வழக்கு - கைதாகபோவது யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR