வெளியானது தமிழ்படம் 2-வின் மரணகளாய் வீடியோ சாங்​ -Watch!

இணையத்தை கலக்கும் தமிழ்படம் 2 படத்தின் "நான் யாருமில்ல" வீடியோ பாடல்!!

Last Updated : Jun 26, 2018, 09:06 PM IST
வெளியானது தமிழ்படம் 2-வின் மரணகளாய் வீடியோ சாங்​ -Watch!

இணையத்தை கலக்கும் தமிழ்படம் 2 படத்தின் "நான் யாருமில்ல" வீடியோ பாடல்!!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் "தமிழ்படம்". இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான. இந்த ட்ரலரில் தமிழகம் முதல் ஹாலிவுட் வரை அனைவரையும் கலாய்த்து, நகைச்சுவையாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் அடுத்த போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் படக்குழுவினர் வின்வெளியில் சீட்டு விளையாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டிக் டிக் டிக் திரைப்படம் குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த போஸ்டரும் டிக் டிக் டிக் திரைப்படத்தினை கலாய்க்கும் வகையிலேயே அமைக்கப்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதையடுத்து தற்போது, படத்தில் இடம் பெற்றிருக்கும் 'நான் யாருமில்ல' என்ற பாடல் வெளியிடப் பட்டுள்ளது. 'நான் எங்க வருவேன் எப்டி வருவேன்னு எனக்கே தெரியாது, ஏன்னா நா வரவே மாட்டேன்', 'என்ன வாழ வைத்தது ஆவின் பாலு', 'இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல, எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்', 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நான் யூ.எஸ்.கிளம்பி போய்டுவேன்', 'எலக்‌ஷன் வந்தா பேச மாட்டேன், ட்விட்டரில் கருத்து போட மாட்டேன், அரசியல்ல நான் குதிக்க மாட்டேன், பீச்சுல தியானம் பண்ண மாட்டேன்', 'நா டி.வி-ல இருந்து வந்தவன்டா என் ப்ரொட்யூஸருக்கு காரு இல்லடா', 'நடிகர் சங்கம் என் உயிர் மூச்சு, மண்டபம் கட்டிட்டு தான் என் கல்யாணம்' என பிரசித்தி பெற்ற பலரின் நிஜ / திரை வசனங்களை வைத்து முழுக்க முழுக்க ட்ரோல் மெட்டீரியலாக இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது.  

அந்த பாடல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது!!

 

More Stories

Trending News