அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது வலிமை படத்தின் கிளிம்ப்ஸ்

வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2021, 06:36 PM IST
அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இதற்கிடையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது வலிமை படத்தின் முன்னோட்டம் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். 

 

 

முன்னதாக விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரண்டும் ஒரே சமயத்தில் வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஒரே சமயத்தில் வெளியானது. இப்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்-அஜித் படங்கள் ஒரே சமயத்தில் மோதிக் கொள்வது கோலிவுட்டை பரபரப்பாக்கிய உள்ளது.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News