தோல்வி படங்களே கொடுக்காத ‘அந்த’ 4 தமிழ் இயக்குநர்கள்..! யார் யார் தெரியுமா..?

தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள் சிலர் இதுவரை தோல்வி படங்களே கொடுத்ததில்லை. அவர்கள் யார் யார் தெரியுமா..? 

Written by - Yuvashree | Last Updated : Sep 10, 2023, 11:38 AM IST
  • தமிழ் திரையுலகில் இதுவரை சில இயக்குநர்கள் ஃப்ளாப் கொடுத்ததே இல்லை.
  • லிஸ்டில் வெற்றி மாறன், அட்லீ ஆகியோர் உள்ளனர்.
  • இவர்கள் இதுவரை தோல்வி படங்களே கொடுக்காதது எப்படி..?
தோல்வி படங்களே கொடுக்காத ‘அந்த’ 4 தமிழ் இயக்குநர்கள்..! யார் யார் தெரியுமா..?  title=

ஒரு படத்தின் வெற்றியை அதன் கதையை வைத்தே கணித்து விடலாம் என்று கூறுவார்கள். அப்படி ரசிகர்களுக்கு பிடித்த கதைகளாக எடுத்த பல தமிழ் இயக்குநர்கள் இதுவரை தங்களது எந்த படங்களும் தோல்வி பெறாமல் பார்த்துக்கொள்கின்றனர். படத்தை வெற்றி பெற செய்ய இந்த இயக்குநர்கள் பெரிதும் எந்த சீக்ரெட்ஸ்களையும் கடைப்பிடிப்பதில்லை. ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களை மட்டுமே தனது கதைகளை சேர்த்து எடுக்கின்றனர். இவர்களது படங்கள் சில விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலை பொறுத்த வரை வெற்றி பெற்றுள்ளன. அப்படி, இதுவரை தமிழ் சினிமாவில் ஃப்ளாப் கொடுக்காத இயக்குநர்கள் சில உள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா..? 

வெற்றி மாறன்:

எந்த உயரத்திற்கு சென்றாலும் பெரிதும் பந்தா காட்டாத பிரபலங்களுள் ஒருவர், வெற்றிமாறன். தன் பெயருக்கு ஏற்றார் போல, முதல் படத்தில் இருந்து இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வெற்றிதான். இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். பல மாநில திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய முதல் படம், ‘பொல்லாதவன்’. வெற்றிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைய, அடுத்தடுத்து தைரியமாக தனக்கு பிடித்தார் போன்ற கதைகளை இயக்க ஆரம்பித்தார். தன் கதைகளுக்கு ஏற்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கவும் அவ்வளவு மெனக்கெடுபவர் இவர். ஒவ்வொரு ஃப்ரேமும் கதை சொல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கியத்தோடு கதை சொல்லும் நாயகன் இவர். வெற்றிமாறன் இயக்கும் படங்களில், ஹீரோவாக இருப்பதே கதைதான். அதைத்தாண்டிதான் ரசிகர்கள் அதில் வரும் நடிகர்களையே ரசிப்பர். பொல்லாதவன் படத்தில் ஆரம்பித்து இவர் கடைசியாக இயக்கிய ‘விடுதலை’ படம் வரை அனைத்தும் சூப்பர் ஹிட்தான். அடுத்தடுத்து விடுதலை 2, வட சென்னை 2, வாடிவாசல் என படங்களின் கதைக்கன வேலைகளில் இறங்கியுள்ளார். 

மேலும் படிக்க | ஒரு வழியாக விடாமுயற்சி அப்டேட் வந்துருச்சு! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?

லோகேஷ் கனகராஜ்:

திறமை மிகுந்த இளமையான இயக்குநர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வழிவிடுவது உண்டு. அப்படி வெகு சில படங்கள் மூலகமாகவே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் லேகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் முதன்முதலாக வெளியான படம், மாநகரம். சிறிய பட்ஜெட்டில் தன் கதைக்கு ஏற்ற நடிகர்களை வைத்து மேஜிக் காண்பித்திருப்பார் லோகேஷ். இதையடுத்து அவருக்கு கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவரை இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுமார் 5 வருடங்களில் விஜய், கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என பலரை தன் படத்தில் நடிக்க வைத்துவிட்டார். அடுத்து இவர் இயக்கியுள்ள ‘லியோ’ படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலர் உள்ளனர். 

மாரி செல்வராஜ்:

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், மாரி செல்வராஜ். பிற இயக்குநர்கள் காதல்-ஆக்ஷன்-காமெடி என பல கமர்ஷியல் அம்சங்களை தன் படங்களில் நுழைக்க, இவர் சாதிய கொடுமை, தீண்டாமை என பல தலைப்புகளை டச் செய்துள்ளார். பல நாட்கள் கழித்து பார்த்தாலும் மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருக்கும் ஜித்தான இயக்குநர் இவர். இவர் கடைசியாக இயக்கியிருந்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் சாதிய அரசியலையும் பேசியிருந்தார். அதற்கு முன்னர் இயக்கிய கர்ணன் படத்தில் அடிப்படை உரிமைகளுக்கான ஒடுக்கப்பட்டவர்கள் எந்த அளவிற்கு போராட வேண்டியுள்ளது என்பதை காண்பித்திருந்தார். இவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. 

அட்லீ:

தமிழ் திரையுலக ரசிகர்களை தாண்டி தற்போது ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இயக்குநர் அட்லீ. இவர் ஷங்கரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின்னர் ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே பம்பர் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து முன்னணி நாயகர்களை வைத்து படங்களை இயக்க தொடங்கினார். சினிமா விமர்சகர்கள் இவரது படங்களை ‘இந்த படத்தில் இருந்து எடுத்த கதை, அந்த படத்தில் இருந்து எடுத்த காட்சி’ என்று விமர்சித்தாலும், ரசிகர்களுக்கு இவர் படங்களுக்கு மத்தியில் வரவேற்பு உள்ளது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கிவிட்டார். மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படம் தற்போது 200 கோடிகளை தாண்டி வசூலை குவித்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களை விட பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்காரா..? அதுவும் இந்த படத்திலா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News