தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இதுதான்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2022, 09:55 AM IST
  • நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாத நபர்.
  • தனது படங்களின் புரமோஷன்களுக்கு மட்டுமே ட்விட்டர் பயன்படுத்தி வருகிறார்.
  • விரைவில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட உள்ளது.
தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இதுதான்! title=

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.  பாக்ஸ் ஆபிசில் ஒரு பெஞ்ச்மார்க்கை செட் செய்துள்ள தென் இந்திய நட்சத்திரங்களில் முதல் இடத்தில் உள்ளார்.  மேலும், இவரை பின்பற்றுபவர்கள் ஏராளம் உள்ளனர்.  உலகளவில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பரந்து விரிந்துள்ளது, இவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என ஏங்கும் நாயகிகளும் ஏராளம்.  நாளுக்கு நாள் இவரின் புகழும், ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதே தவிர ஒருநாளும் குறைந்தபாடில்லை.  இவ்வளவு பெருமைவாய்ந்த இந்த நடிகர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கம் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள்!

இவர் ஏற்கனவே பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறார்.  தற்போது இன்ஸ்டாகிராமிலும் கணக்கு தொடங்க எண்ணியிருப்பதாகவும், அதன்படி அவரது பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆனால் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது பிரைவேட் அக்கவுண்ட்டாக இருக்கிறது.  பல நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென்று ஒரு கணக்கு தொடங்கி வைத்து, அதில் நாளும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.  அவர்களை அதிகமான ரசிகர்களும் பின்தொடர்கின்றனர், அப்படி இருக்கையில் விஜய் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடவே முடியாது.  

மேலும் நடிகர் விஜய் அவரது பணி சூழலின் காரணமாக பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கமாட்டார்.  பெரும்பாலும் அவரது படங்களின் பர்ஸ்ட் லுக், ட்ரைலர் மட்டுமே பதிவிடுவார், இவரை ஆன்லைனில் காண்பது என்பது அரிதான ஒன்று.  சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சமூக வலைத்தளங்கள் தொடங்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் அக்கவுன்டும் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கிறது.

மேலும் படிக்க | முதல் முதலாக வெளியான விஜய்யின் மச்சினிச்சி புகைப்படம்! இணையத்தில் வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News