தனி ஒருவன் 2: வெளியானது மாஸ் முக்கிய அப்டேட்.. இன்னும் 8 மணி நேரத்தில்

Thani Oruvan 2 Movie Update: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2023, 09:51 PM IST
  • ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2.
  • நாளை மாலை 6 மணிக்கு அப்டேட்.
தனி ஒருவன் 2: வெளியானது மாஸ் முக்கிய அப்டேட்.. இன்னும் 8 மணி நேரத்தில் title=

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்திருந்த படம், தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நடிகர் அரவிந்த் சாமி நீண்ட நாட்களுக்கு பிறகு ‘தனி ஒருவன்’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தனி ஒருவன்: 

2015ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம், தனி ஒருவன். காதல்-காமெடி நாயகனாக நடித்து வந்த ஜெயம் ரவிக்கு, இப்படம் புதுமையான முகம் ஒன்றை கொடுத்தது. கதாநாயகர்களை தாண்டி கதையும் பேசும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியிருந்தது தனி ஒருவன் திரைப்படம். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். வில்லனாக அரவிந்த் சாமி மிரட்டியிருந்தார், தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். 

மேலும் படிக்க | உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் நயன் - விக்னேஷ்! போட்டோ வைரல்

கதை: 

மருத்துவ உலகில் நடக்கும் மாஃபிய..அதன் தலைவனாக விளங்கும் சித்தார்த் அபிமன்யூ..அவனை அழித்தால்தான் பல குற்றங்களை தவிர்க்க முடியும் என்று கண்டு பிடிக்கிறான் ஹீரோ. வில்லனை தனது எதிரியாக வைத்து கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான். இதை தெரிந்து காெண்ட வில்லன் ஹீரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறான். இறுதியில் என்ன நடந்தது? தன் மீது உள்ள குற்றத்தை சித்தார்த் அபிமன்யூ ஒப்புக்கொண்டானா? அவனது குற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு படத்தின் அடுத்தடுத்த காட்சிகளுக்கு விடை இருக்கும். 

எதிர்பார்க்காத திருப்பங்கள், காதல்-சண்டை காட்சிகளுக்கான பேலன்ஸ் என படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை ஈர்த்தன. ஹீரோ மட்டும் கெத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வில்லத்தனத்திலும் ஹீரோயிசத்தை காட்டலாம் என்பது போன்ற படத்தில் சித்தார்த் அபிமன்யூவின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தில் ஜெயம் ரவியின் நண்பர்காளாக வருபவர்கள், காதலியாக வரும் நயன்தாரா, துணை கதாப்பாத்திரங்கள் என அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை நெய்யப்பட்டு இருக்கும். இதனால்தான் வெளியாகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகியும் இப்படம் குறித்து ரசிகர்கள் ஓயாமல் பேசி வருகின்றனர். 

தனி ஒருவன் 2 அப்டேட்:

ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோர் எங்கு சென்றால் அவர்களை சூழ்ந்து காெள்ளும் ரசிகர்கள் ‘தனி ஒருவன் 2’ அப்டேட்ட எப்போது என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு படவிழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் பணிகள் தொடங்கினால் கண்டிப்பாக தான் அந்த படத்தில் நடிப்பேன் என்று கூறினார். அவர் வாய் முகூர்த்தம் தற்போது பலித்துள்ளது. 

தனி ஒருவன் திரைப்படம், 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தில் இருந்து, அனைத்து வருட கொண்டாட்டங்களுக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், 8 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பின் படி,  தனி ஒருவன் 2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று வெளியாகியுள்ளது.  முதல் பாகத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரே ஹீரோவாக நடிக்கயுள்ளார். அதேபோல் 2 ஆம் பாகத்திலும் நயன்தாரா தான் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் தெரிகிறது. 

 

மேலும் படிக்க | இதுவர ஜெயிலர், இனிமே... அலப்பற கெளப்பும் 'தலைவர் 170' - புதிய அப்டேட்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News