இதுவர ஜெயிலர், இனிமே... அலப்பற கெளப்பும் 'தலைவர் 170' - புதிய அப்டேட்கள் இதோ

Thalaivar 170 One Line: ரஜினிகாந்த், ஜெய் பீம் பட இயக்குநரான டி.ஜெ. ஞானவேலுடன் இணையும் 'தலைவர் 170' படத்தின் பூஜை நேற்று செய்யப்பட்ட நிலையில், அப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 27, 2023, 10:31 AM IST
  • நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் வெற்றியை ரஜினி கேக் வெட்டி கொண்டாடினார்.
  • ஜெயிலர் திரைப்படம் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்.
  • செப்டம்பர் 3ஆவது வாரத்தில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.
இதுவர ஜெயிலர், இனிமே... அலப்பற கெளப்பும் 'தலைவர் 170' - புதிய அப்டேட்கள் இதோ title=

Thalaivar 170 One Line: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக. 10ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் உலகம் முழுவதும் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இதற்கு முன் வந்த அண்ணாத்த திரைப்படம் பின்னடைவாக அமைந்தாலும், ஜெயிலர் திரைப்படம் அதனை மறக்கடிக்க வைக்கும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பீஸ்ட் படத்தின் கடும் விமர்சனத்தில் இருந்து நல்ல கம்பேக் கொடுத்துள்ள நெல்சன் தற்போது ஹேப்பி மோடில் இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினர். இதில், ரஜினி, நெல்சன், ரம்யா கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ரஜினி கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார். 

முன்னதாக, ரஜினி ஜெயிலர் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இமயமலை உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால், ஜெயிலர் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. தற்போது ரஜினி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திருதம்பிய பின், இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. ஜெயிலர் கொடுத்த தெம்புடன் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார் எனலாம். 

மேலும் படிக்க | 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் பிரபல நடிகர் சோகம்..!

ஜெய்பீம் படத்தின் இயக்குநர் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நேற்று (ஆக. 27) சென்னை லீலாபேலஸில் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த திரைப்படத்திற்கு தற்போது வரை பெயர் வைக்காததால் இது 'தலைவர் 170' என பொதுவாக அழைக்கப்படுகிறது. ரஜினிகாந்தின் 170ஆவது படமான இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பூஜையை அடுத்து 'தலைவர் 170' படத்தின் பல்வேறு அப்டேட்களும் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஷர்வானந்த், மஞ்சு வாரியர் மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் பூஜையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இதுவரை வெளிவரவில்லை. படத்தின் அப்டேட் உடன் அவை வெளியிடப்படும் என தெரிகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அனிருத் தான் தலைவர் 170 படத்திற்கும் இசையமைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அப்படி அவர் இசையமைத்தால் ரஜினிகாந்துடன் அவருக்கு நான்காவது படமாக இது அமையும். 

'தலைவர் 170' படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டர் அல்லது அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவர்கள் படத்தின் அதிகாரப்பூர்வ பெயரை விரைவில் வெளியிட முடிவு செய்தால் அது மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். 

'தலைவர் 170' திரைப்படம் ஒரு போலி என்கவுன்டரை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 'தலைவர் 170' திரைப்படம் ஒரு நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான தனது தோற்றத்தை ரஜினிகாந்த் ஏற்கனவே உறுதிசெய்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்கும் என கூறப்படுகிறது. 

'ஜெயிலர்' வெற்றிக்கு பின் ரஜினிக்கும், 'ஜெய் பீம்' படத்தின் புகழுக்கு பின் இயக்குனர் ஞானவேலுக்கும் இடையேயான கூட்டணியால், 'தலைவர் 170' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, ஏனெனில் புதிய ஜோடியில் இருந்து ஒரு வலிமையான படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News