விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார்?

Last Updated : May 11, 2016, 11:36 AM IST

Trending Photos

விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார்? title=

'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே எ.ஆர் முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் 'ஹாலிடே' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தை இந்தியிலும் எ.ஆர் முருகதாஸ் இயக்க அக்ஷய்குமார் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதை தொடர்ந்து. 'கத்தி' இந்தி ரீமேக்கிலும் இவர் நடிக்கவிருக்கிறார். அதைதொடர்ந்து "தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று படங்களுமே விஜய் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய்குமார் தற்போது ஷங்கரின் '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

Trending News