சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்கை பற்றிய படம் "வீரப்பன்" என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இதற்காக ட்ரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே எ.ஆர் முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் 'ஹாலிடே' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தை இந்தியிலும் எ.ஆர் முருகதாஸ் இயக்க அக்ஷய்குமார் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதை தொடர்ந்து. 'கத்தி' இந்தி ரீமேக்கிலும் இவர் நடிக்கவிருக்கிறார். அதைதொடர்ந்து "தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா நடித்திருக்கும் படம் ‘24’ வருகிற மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சூர்யா மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்த இப்படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் மேலும் பலர் நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் "இளைய தளபதி" என்று செல்லமா அழைக்கப் படும் விஜய் பற்றிய சில குறிப்புகள்.
யூடூப்புல 3நிமிடம் ஓடும் காட்சியை பாருங்கள். விஜயின் குழந்தை முதல் சமிப காலம் போட்டோகள் இடம் பெற்றுகின்றன. தன் அப்பா அம்மாவுடன் இருக்கும் போட்டோவும் சரி அல்லது தன் தங்கையுடன் இருக்கும் போட்டோவும் சரி மிக அருமை.
மேலும் இதில் இவருடன் பணிபுரிந்த சில டைரக்டர் போட்டோவும் இடம் பெற்றுருக்கின்றன. சில போட்டோ தனிமைலும் மற்றும் பாலிவூட் ஹீரோக்களுடன் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பாருங்கள் "விஜயின் மறுபக்கம்" என்ன என்று உங்களுக்கு தெரியும்.
சமுத்தரகனி தானே இயக்கி நடிக்கும் திரைப்படம் தான் "அப்பா" சாட்டையின் 2ம் பாகமாக கருதப்படும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தம்பி இராமையா நமோநாராயணன் இன்னும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றுள்ளது. இன்னும் ரிலிஸ் தேதி அறிவிக்க படவில்லை.
சமுக அக்கறையுடன் எடுத்திருக்கும் இப்படத்திருக்கா காத்திருப்பதாக சமுக வலைதளங்களில் மக்களின் கருத்துகள் உலவுக்கின்றன.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்திருக்கு ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதால் மேலும் பாட்ஷாவில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது. ரசிகர்கள் மற்ற அனைவருமே வாழ்த்துக்கள் கூறி வருகின்றன மேலும் திரையுலக நடிகர் நடிகைகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஜி வி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் தான் "பென்சில்" மணி நாகராஜ் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படம் தான் ஜி.வி.பிரகாஷின் முதல் படம்.
சில காரங்களால் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் இரண்டு படத்தில் நடித்துவிட்டார். மிண்டும் இப்படம் ரிலீஸ்கான ஏற்பாடு செய்யப்பட்டு வெளியாகிறது.
மேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஸ்ரீ வித்யா, ஊர்வஷி, விடிவி கணேஷ் இன்னும் பலர் நடிகின்றன.
நடிகர் சங்கம் சார்பாக தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயாலாளர் விஷால் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
விஷால்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.