டைம்ஸ் டாப் 50 பட்டியல்: தனுஷ் 26_வது இடம்; விஜய், அஜித்துக்கு இடம் இல்லை!!

Last Updated : Jun 27, 2017, 04:13 PM IST
டைம்ஸ் டாப் 50 பட்டியல்: தனுஷ் 26_வது இடம்; விஜய், அஜித்துக்கு இடம் இல்லை!!

2016-ம் ஆண்டிற்கான ஆண் பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளிட்டுள்ளது. அதில் முதல் 50 இடங்களை பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழக நடிகர்களில் தனுஷ் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை ரோகித் கன்டெல்வால் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். 

முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழக நடிகர்களில் தனுஷ் மட்டுமே 26_வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழக நடிகர்களில் மகேஷ் பாபு 7_வது இடத்தையும், பிரபாஸ் 22_வது இடத்தையும், ராணா 24_வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். மலையாள நடிகர்களான துல்கர் சல்மான் 14_வது இடத்தையும், நிவின் பாலி 28_வது இடத்தையும், கன்னட நடிகரான சுதீப் 43_வது இடத்தையும் பெற்றுள்ளார்கள். 

ஆனால், இதில் ஆச்சிரியம் என்னவெனில் தமிழக திரைத்துறையில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட மற்ற நடிகர்கள் யாரும் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More Stories

Trending News