கடைசியாக சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' (Eeswaran) படத்தை இயக்கிய சுசீந்திரன் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்போது "வீரபாண்டியபுரம்" என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் மீனாட்சி, சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், முக்தார் கான் போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
ALSO READ | மதுரை திரையரங்கில் வெளியான சூரரைப்போற்று!
இந்த படம் முழுக்க முழுக்க மண்வாசனையுடன் கிராமம் சார்ந்த பின்னணியில் அமைந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படம் இதுவரை ஜெய் (Actor jai) கேரியரில் இல்லாத அளவுக்கு புகழை சேர்க்கக்கூடியதாக இருக்கும், இப்படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதில் ஜெய் கெட்டப் 'சுப்ரமணியபுரம்' படத்தில் இருந்த கெட்டப் போல இருந்தது. ஆனால் இது அந்த படம் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படம் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் "சிவ சிவா" என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்த படத்தின் தலைப்பை "வீரபாண்டியபுரம்" என்று மாற்றிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், 'பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். Lendi ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜெய் நடிப்பில் "வீரபாண்டியபுரம்" என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். Final Mixing-ல் இத்திரைப்படத்தை பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக் குழுவினரையும் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள், இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படம் என்பதால் "சிவ சிவா" திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கும் உடன்பாடு ஏற்பட்டதால், தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து "சிவ சிவா" என்ற தலைப்பிற்கு மாற்றாக "வீரபாண்டியபுரம்" என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ALSO READ | புதிய அவதாரத்தில் தோனி: 'அந்த பார்வையால்' திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR