‘மீண்டும் ஒரு காதல் காவியம்’., இம்முறை நம் ‘அதிதி ராய்’ நடிப்பில்...

தென்னிந்திய நடிகை அதிதி ராய் மற்றும் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சபியும் சுஜத்தையும்’ எனும் மலையாள திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Jun 24, 2020, 03:15 PM IST
‘மீண்டும் ஒரு காதல் காவியம்’., இம்முறை நம் ‘அதிதி ராய்’ நடிப்பில்...

தென்னிந்திய நடிகை அதிதி ராய் மற்றும் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சபியும் சுஜத்தையும்’ எனும் மலையாள திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா முழு அடைப்பால் திரையரங்குகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ‘சபியும் சுஜத்தையும்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஆன்லைன் திரையில் வெளியாகவுள்ளது. படக்குழுவினரின் அறிவிப்பு படி இத்திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி ஆன்-லைன் ஸ்டீரிமிங் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை நரிம்புழா ஷானவாஸ் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் விஜய பாபு தனது தயாரிப்பு நிறுவனமான ப்ரைடே ப்ளிம் ஹவுஸ்-ன் கீழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

திரைப்படத்தின் கதையம்சம் பெரும்பாலும் ஆராயப்படாத ஒன்றாகும். கதை நுணுக்கமானது மற்றும் சிக்கலானது, ஆனால் ஒரு எளிய, உலகளாவிய உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அதாவது எந்தொரு அன்புக்கு பகுத்தறிவு அல்லது எல்லைகள் எதுவும் கிடையாது என்பதை மென்மையாக கூறுகிறது. அன்பின் அனைத்து முக்கியமான உணர்ச்சிகளுக்கும் இசை ஒரு பொருத்தமான இடத்தை திரைப்படத்தில் பெற்றிருப்பது போல் தெரிகிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த படம் உலகளாவிய பார்வையாளர்களை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இப்படத்தை ஒளிப்பதிவாளர் அனு மூத்தேத் படமாக்கியுள்ளார் மற்றும் தீப்பு ஜோசப் தொகுத்துள்ளார். ஹரி நாராயண் எழுதிய பாடல்களையும், சுதீப் பழநாடு பாடிய பாடல்களையும் இசையமைப்பாளர் M.ஜெயச்சந்திரன் தொகுத்துள்ளார்.

More Stories

Trending News